பாவக் கிரகங்களுடன் இணைந்தாலும் அவை கொடுக்கும் கெடுதல்களையும் போக்கும் கேது பகவான்!
Sinful And Shadow Planet Ketu Traits: பாபக் கிரகங்களாகிய, சனி, செவ்வாய் ராகு ஆகியவற்றுடன் கேது இணைந்தால், பாவ கிரகங்களின் தீமைகளை நீக்கி, அவற்றையும் வலுப்படுத்தக்கூடிய சக்தி படைத்தவர் கேது பகவான்
கேதுவிற்கு ஆன்மீக கிரகம் என்றும், ஞானக்காரகன் என்றும் பெயர் உண்டு. உலகியல் இன்பங்களில் இருந்து ஒதுங்கி இருக்கக் கூடிய எண்ணத்தைத் தரக்கூடிய கிரகம் கேது என்பதால் கேதுவிற்கு தனிமையை கிரகம் என்றும் பெயர் உண்டு. அது மட்டுமா, எந்த ஒரு விஷயத்திலும் தீவிரமான இறுதி நிலையை கொண்டு வந்து சேர்க்குக்ம் கிரகம் என்பதால் ஆராய்ச்சி கிரகம் என்றும் கேதுவிற்கு பல பெயர்கள் உண்டு.
ஆனால், அவற்றையெல்லாம் விட பாவ கிரகம் என்ற பெயரும் உண்டு. ஒரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படக்கூடிய 3, 6, 8, மற்றும் 12இல் கேது இருந்தால் யோகம் என்பது ஜோதிடம் சொல்லும் உண்மை.
அதேபோல, கேது தான் இருக்கும் இடத்தின் அதிபதி மட்டுமல்ல, கேதுவின் பார்வையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரக இணைப்பின்போது ஒரே ராசியில் பிற கிரகங்களுடன் இருந்தால் அந்த கிரகங்களின் பலனையும் சேர்த்து தன்னுடைய தசையில் தரும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபக் கிரகங்களாகிய, சனி, செவ்வாய் ராகு ஆகியவற்றுடன் கேது இணைந்தால், பாவ கிரகங்களின் தீமைகளை நீக்கி, அவற்றையும் வலுப்படுத்தக்கூடிய சக்தி படைத்தவர் கேது பகவான். அதுமட்டுமல்ல, சனி அல்லது செவ்வாயுடன் கேது இணைந்து இருக்கும் பொழுது சனி அல்லது செவ்வாய் ஜாதகருக்கு தீமைகள் தரக்கூடிய நிலையை மாற்றி நன்மைத் தரக்கூடிய கிரகம் கேது.
குரு பகவானுடன் கேது பகவான் இணைந்தால் கேள யோகம் என்ற அற்புதமான யோகம் ஏற்படும். இந்த கேள யோகத்தில் குரு திசை தரும் நன்மைகளை விட, கேது திசை முழுக்க ஜாதகருக்கு அதிக நன்மைகள் ஏற்படும், அது மட்டுமல்ல, கெட்ட குருவாக இருந்தாலும், கேது சேர்ந்துவிட்டால், குரு திசையும் ஜாதகருக்கு நன்மைகள் தரும்.
மேலும் படிக்க | மாத்ரு காரகரும் மனோகாரகரும் இணைந்தால்? 100 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கேது-சந்திரன்!
இப்படி, சுப கிரகங்களோடு இணையும் பொழுது சுபக்கிரகங்களை அவற்றின் போக்கில் நன்மையை செய்ய விட்டுவிடும் கேது பகவான், பாவ கிரகங்களோடு இணையும் பொழுது பாவ கிரகங்களின் தீமைகளை சமன்படுத்தக் கூடிய கிரகம் கேது.
சுக்கிரன் கேது சேர்க்கை
கேது பிற கிரகங்களுடன் இணைந்தால் நன்மையை அதிகரித்துத் தருவார் என்றாலும், சுக்கிரனோடு இணையும்போது மட்டும், காரகத்துவ அளவில் சிறிய அளவிலான மாற்றத்தைக் கொடுக்கும்.
கேது தோஷங்கள்
ஒரு ஜாதகரின் ஜாதக கட்டத்தில் 2,4,8, 12ம் பாவகங்களில் கேது இருப்பது நாகதோசம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தோஷங்கள் எல்லாமே கேதுவின் தசை வரும்போது மட்டுமே தோஷத்தைக் கொடுக்கும் என்பது குறிபிடத்தக்கது.
மோட்சம் யாருக்கு?
ஒருவரின் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவகத்தில் கேது இருந்தால், ஜாதகருக்கு மறுபிறவி இல்லை மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பன்னிரெண்டாம் பாவகத்தில் கேது இருந்தாலும் சுபக்கிரகங்களின் தொடர்போடு இருக்கும்பொழுது மட்டுமே ஜாதகருக்கு அந்தப்பிறவியில் மோட்சம் கிடைக்கும் என்பது அடிப்படை விதி. அதேபோல, குரு-சனி-கேது இணைவு, ஆன்மீகத்தில் ஈடுபாட்டை கொடுப்பதுடன், முக்தையையும் தரும்.
கேதுவின் நிலை
கேதுவிற்கு வீடு ஏதும் தனிப்பட்ட முறையில் இல்லை என்பதால், ஜாதக கட்டத்தில் கேதுவுக்கு வீடு கொடுத்த கிரகமும் கேதுவுக்கு கால் கொடுத்த கிரகமும் வலிமையாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ