நவபஞ்சம யோகத்தால் விதியை நொந்துக் கொள்ளப்போகும் ராசிகள்! எச்சரிக்கையாக இருக்கவும்!

Navpancham Yog 2024: ரிஷப ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிக்கும் அதேவேளையில், கேது கன்னி ராசியில் இருக்கிறார். இதனால் நவபஞ்சம் யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
 

குரு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் ஒன்பதாம் மற்றும் ஐந்தாம் வீடுகளில் சஞ்சரித்தால் நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக மாறி, தோஷமாக மாறுகிறது. குரு மற்றும் கேதுவால் உருவாகும் நவபஞ்சம யோகம் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்வில் புயலாக மாறி அலைகழிக்கும் என்பதை அறிந்துக் கொள்வோம்.

1 /7

கிரகங்கள் அவ்வப்போது தங்கள் இயக்கங்களை மாற்றுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை காரணமாக ராஜயோகம் உருவாகிறது, அந்த வகையில் கேது மற்றும் குருவின் சஞ்சாரத்தால் ஏற்படும் நவபஞ்சம யோகம், சிலருக்கு தோஷமாக மாறி படுத்தி எடுக்கும்.

2 /7

நவபஞ்சம யோகத்தால் ஏற்படும் விபரீத விளைவுகளை சில ராசிகள் எதிர்கொள்ளவிருக்கின்றன. அசுப சேர்க்கையால் சிலரின் வேலை கெடும்...

3 /7

2024ம் ஆண்டில் நவபஞ்சம யோகத்தின் பாதிப்புகளை எந்தெந்த ராசிகள் எதிர்கொள்ளும் என்பதைத் தெரிந்துக் கொண்டால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து தற்காத்துக் கொள்வது நல்லது. பாதுகாப்பை முக்கியமாக கருத வேண்டிய ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா?

4 /7

தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் தோஷமாக மாறி பிரச்சனை தரும். உங்கள் வாழ்க்கையில் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மற்றவர்கள் தலையிட்டு மாற்றலாம். இதனால் ஏமாற்றமடைவீர்கள். கவனக்குறைவாக இருக்கவேண்டாம், பலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பரிவர்த்தனைகளை கவனமாக நடத்த வேண்டும். மரியாதை பாதிக்கப்படாமல் பாதுகாப்பது அவசியம்

5 /7

நவஞ்சம யோகமானது, சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம தோஷமாக மாறும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பிரச்னைகள் ஏற்படும். உங்களுக்கு வரும் வாய்ப்பை நீங்கள் இழக்க நேரிடலாம். ஒருவருடன் தகராறு ஏற்பட்டு, அது உங்கள் நற்பெயரைக் கெடுக்கும். சட்ட விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை உரக்க சொல்லாமல் இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தைப் பொறுமையாக கடந்து செல்லுங்கள்.

6 /7

நவம்பஞ்சம் யோகத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பணவரத்திலும் சிக்கல் இருக்கலாம். கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அதிகரிக்கு. தொழிலில் பிரச்சனை வரலாம். தொழிலதிபர்கள் முதலீடு செய்யும்போது புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை