மகாளய பட்சம்​ 2022: புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமைத் தொடங்கி அமாவாசை வரை, 14 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த ஆண்டின் மகாளய பட்சம் காலம் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த வருடம் புரட்டாசி மாதம் 8ம் தேதி, அதாவது செப்டெம்பர் 25ம் தேதி ஞாயிறு மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர்  ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.  நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.  மேலும், மகாளய பட்ச காலத்தில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம், கன்னியாகுமரி, கோடியக்கரை, காவிரி ஆறு போன்ற புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நம் வம்சம், வாழையடி வாழையாக  தழைத்தோங்குவதோடு, பித்ருக்களின் ஆசியால் மன நிம்மதியும், வாழ்க்கையில் வளமும் வந்து சேரும். 


ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில், மறைந்த திதியில், சிரார்த்தம் செய்வோம். அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு இயலவில்லை என்றால், சில குறிப்பிட்ட திதிகளில் மட்டுமாவது  செய்ய வேண்டும். 


மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!


மகாளய பட்சம் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:


1. தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.


2. முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும்.


3. உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.


4. சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.


5. தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது.


6. மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து, அவர்களை நினைவு கூற வேண்டும்.


7. தினமும் தர்ப்பணம் செய்த பின்னர் பூஜைக்கான விளக்கை ஏற்றி வழிபட்டு அன்றாட பணிகளை தொடங்க வேண்டும்.


இந்த மகாளய பட்ச காலத்தில், மேற்கூறியவைகளை கடைபிடித்து, பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்து, அவர்களின் ஆசியை முழுமையாக பெறலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ