குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் பெயர்ச்சியாகவுள்ளார். குரு அறிவாற்றல், ஆன்மீகம், மங்களகரமான செயல்களின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது குரு மீன ராசியில் உள்ளார். ஏப்ரல் 22ம் தேதி காலை 06:12 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அவர் மாறுகிறார். ராகு கிரகம் ஏற்கனவே மேஷ ராசியில் அமர்ந்துள்ளது. குருவும் அங்கு பெயர்ச்சியாவதால் குரு சண்டாள யோகம் உருவாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லை. எனினும், 4 ராசிக்காரர்க்ளுக்கு ராகு மற்றும் குருவின் சேர்க்கை மிக நல்லதாக கருதப்படுகின்றது. ராகு கிரகம் அக்டோபர் மாதத்தில் மேஷ ராசியில் இருந்து மீனத்திற்கு மாறும். ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


இந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நற்பலன்களை அளிக்கும்: 


1. மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த நேரம் அலுவலக பணியில் இருப்பவர்க்ளுக்கு நல்லதாக கருதப்படுகின்றது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளும் திறக்கப்படும். போட்டித் தேர்வுகளில் தற்போது நல்ல வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள்.


2. கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் துர்கை அம்மனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். 


மேலும் படிக்க | அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்!


3. சிம்மம்


ஏப்ரல் மாதத்தில் குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அள்ளித் தரும். இது சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது நல்ல நேரம். உங்கள் மனம் ஆன்மீகப் பணிகளில் ஈடுபடும்.


4. துலாம்


துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் தற்போது மீண்டும் கிடைக்கும். இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மேஷத்தில் சூரியன்! சித்திரை மாதத்தில் சவால்களை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ