மாத ராசிபலன்: இவைதான் ஏப்ரல் மாத அதிர்ஷ்ட ராசிகள், மாதம் முழுதும் பொன்னாய் மின்னும்!!

Monthly Horoscope: ஏப்ரல் மாத கிரகப் பெயர்ச்சிகள் 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 30, 2023, 11:03 AM IST
  • ஏப்ரல் 2023 தனுசு ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்களைத் தரும்.
  • தொழிலில் முன்னேற்றத்தையும் தரும்.
  • கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
மாத ராசிபலன்: இவைதான் ஏப்ரல் மாத அதிர்ஷ்ட ராசிகள், மாதம் முழுதும் பொன்னாய் மின்னும்!! title=

ஏப்ரல் மாத அதிர்ஷ்ட ராசிகள்: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பல முக்கிய கிரகங்கள் இந்த மாதம் ராசியை மாற்றுகின்றன. இதில் மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுவது குரு பகவானின் ராசி மாற்றமாகும். சுமார் 1 வருட காலம் கழித்து குரு பகவான் தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் நுழைவார். இது தவிர, சூரியப் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி போன்றவையும் இந்த மாதம் நடக்கும். இந்த கிரகப் பெயர்ச்சிகள் 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

ஏப்ரல் 2023-க்கான அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். இந்த நேரம் தொழில் மற்றும் பண விஷயத்தில் நல்ல லாபம் ஏற்படும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்க இப்போது வாய்ப்புள்ளது. 

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் பல நல்ல செய்திகளைத் தரும். வலுவான பண ஆதாயம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். முன்னேற்றம் கிடைக்கும். ஆனால் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

மேலும் படிக்க | இந்த ராசிகளுக்கு ராம நவமி மிகவும் உகந்தது, இன்று முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதி குறிப்பாக மங்களகரமானதாக இருக்கும். பெரும் பண வரவு இருக்கும். எதிர்பாராத வெற்றிகளும் இப்போது கைகூடும். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு தொழில், செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றில் ஏப்ரல் மாதம் நல்ல பலன்களைத் தரும். உத்தியோகத்தில் நிலைமை சிறப்பாக இருக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

தனுசு: 

ஏப்ரல் 2023 தனுசு ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றத்தையும் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். புதிய ஆதாரங்கள் மூலம் பணம் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்: பணத்தை இழக்க நேரிடும்... இந்த ராசிகள் மார்ச் 31 முதல் மிக மிக கவனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News