திரிகிரஹி யோகம்: பணத்தை இழக்க நேரிடும்... இந்த ராசிகள் மார்ச் 31 முதல் மிக மிக கவனம்!

Trigrahi Yoga In Mesh: மேஷ ராசியில் நாளை (மார்ச் 31) புதன் சஞ்சரிக்க உள்ளார். எனவே, அந்த ராசியில் ஏற்கெனவே இருக்கும் சுக்கிரன், ராகு உடன் புதனும் இணைவதால், திரிகிரஹி யோகம் உருவாகும்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 30, 2023, 07:22 AM IST
  • இது அனைத்து ராசியினரின் வாழ்விலும் தாக்கத்தை செலுத்தும்.
  • இருப்பினும், குறிப்பிட்ட சில ராசியினரை கடுமையாக பாதிக்கும்.
  • இந்த நேரத்தில் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.
திரிகிரஹி யோகம்: பணத்தை இழக்க நேரிடும்... இந்த ராசிகள் மார்ச் 31 முதல் மிக மிக கவனம்! title=

Trigrah Yoga In Mesh: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. செல்வம், புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றைத் தரும் புதன், மார்ச் 31ஆம் தேதி (நாளை) பெயர்ச்சியாகி மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். 

புதன் சஞ்சாரத்துடன், மேஷ ராசியில் புதன், சுக்கிரன், ராகு சேர்க்கை இருக்கும். ஏனென்றால் ராகுவும் சுக்கிரனும் ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கின்றனர். இதன்மூலம், மேஷத்தில் திரிகிரஹி யோகம் உருவாகும்.

இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு நிறைய சிரமங்களை உருவாக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள், நாளை முதல் கவனமாக இருக்க வேண்டியவர்கள் என்பதை இதில் காணலாம். 

மேலும் படிக்க | Ram navami 2023: ராம நவமி நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை..!

புதன் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்களை அதிகரிக்கும்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சாதகமான பலனைத் தராது. இந்த மக்கள் பணம் பெறுவார்கள், ஆனால், செலவுகள் அதிகரித்து அவர்களின் திட்டத்தை கெடுத்துவிடும். அவர்களின் எந்தவொரு உறவிலும் மோசடி நடக்கலாம்.  நண்பர் அல்லது பங்குதாரர் அவரை ஏமாற்றலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்வது சரியானதல்ல. குறிப்பாக அபாயகரமான முதலீடுகளை செய்யாதீர்கள். பலரிடம் வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சற்று கேடு விளைவிக்கும். இந்த திரிகிரஹி யோகம் கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது விதிகளை பின்பற்றினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடலாம். பொருளாதார நிலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உறவுகளிலும் பிரச்சனைகள் வரலாம். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராம நவமி 2023 தேதி : பூஜை செய்ய ஏற்ற நேரமும், சொல்ல வேண்டிய மந்திரமும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News