Sani Vakra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்களின் ராசிகள் மட்டுமல்லாமல் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இன்னும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவானும் பல வித மாற்றங்களை மேற்கொள்கிறார். இவரது அனைத்து மாற்றங்களும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. தற்போது சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 முதல், சனி வக்ர நிவர்த்தி அடைவார். 


சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீண்ட நாட்களாக முடங்கி இருந்த பணிகள் இப்போது நிறைவடையும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம் (Aries)


ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்கள் அதில் அதிக வளர்ச்சி அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சனியின் சிறப்பு அருளால் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.


மேலும் படிக்க | மே மாதத்தில் மங்களகரமான ராஜயோகம்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்!


ரிஷபம் (Taurus)


ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். பொருளாதார நிலை மேம்படும். இந்த காலத்தில் அதிக நன்மைகளை பெறுவீர்கள். அனைத்து வித பிரச்சனைகளும் வாழ்க்கையை விட்டு நீங்கும். இத்துடன் இந்த ராசிக்காரர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். பண வரவு அதிகரிப்பதால் நிதி நிலையும் நன்றாக இருக்கும். 


விருச்சிகம் (Scorpio)


ஜோதிட சாஸ்திரப்படி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சுப பலன்களைத் தரப்போகிறது. அவர்களின் தொழிலில் வளர்ச்சி இருக்கும். வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். சனி பெயர்ச்சியால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவிற்கான புதிய வழிகள் திறக்கும், நிதி நிலை மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 


மீனம் (Pisces)


மீன ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரசானைகள் சனி பெயர்ச்சி காலத்தில் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இந்த காலத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். 


 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும்.... இது குருவின் கேரண்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ