நியூடெல்லி: ராஜயோகங்களை உருவாக்கும் கிரகங்களில் முதன்மையானவர் செல்வாக்கு தரும் சுக்கிர பகவான். சுக்கிரனின் சஞ்சார மாற்றமும்ம் அதன் தாக்கமும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் தெரியும். செல்வாக்கு மற்றும் வாழ்க்கையை அனுபவித்து வாழ வழிவகுக்கும் கிரகம் சுக்கிரன், ஏப்ரல் 6 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு வருவதால் பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகத்தின் பலன்களை அனுபவிக்கும் ராசிகள் இவை


மாளவ்ய ராஜயோகம்


ஆறு ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை கொடுத்தால், பாவம் மீதி ஆறு ராசிக்காரர்கள் என்ன செய்வார்கள்? சுக்கிர பெயர்ச்சியின் சுபபலன்களைப் பெற அனைத்து ராசியினரும் என்ன செய்ய வேண்டும்


மாளவ்ய ராஜயோகத்தால் மகிழ பரிகாரங்கள் இவை  


மேஷம்: மேஷ ராசியின் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், திடீரென பணவரத்து அதிகரிக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாளவ்ய ராஜயோகத்தை அனுபவிக்க சிவ வழிபாடு நல்லது


மேலும் படிக்க | புதனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் தொடங்கும்!!


ரிஷபம்: பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நல்லதை நடத்திக் கொடுக்கும்.


மிதுனம்: மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்க விருப்பம் இருந்தாலும், அதற்கு சுக்கிரனின் அனுக்கிரகம் வேண்டும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் இருந்தால், முருகனை வழிபடவும்.


கடகம்: சொத்து பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். ஆனால், மனதில் ஏதோ ஒரு வருத்தம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். அதை தவிர்க்க, அன்னை பார்வதியை வணங்குங்கள்.  


சிம்மம்: ஆடம்பரமான பொருட்களை வாங எண்ணங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும், பக்த அனுமானை வணங்கினால் நினைத்தது கைகூடும். 


கன்னி: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்விப் பணிகளில் ஈடுபடுபவர்கள், வாழ்க்கை சிறக்க, அன்னை ஆதிபராசக்தியை வணங்குங்கள்.  


துலாம்: எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். அதைத் தவிர்க்க, விநாயகரை வழிபடவும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். 


விருச்சிகம்: கடினமான பணிகளால் சூழப்படும்போது, அதையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆனால் கொடுக்கல், வாங்கலில் சிக்கல் ஏற்படும். எனவே, குபேரனை சனிக்கிழமையில் வேண்டி பணத்தை பிறருக்கு கொடுத்தால் நல்லது.  


மேலும் படிக்க | லஷ்மி கடாட்சம் பெற வியாழக்கிழமை வாஸ்து டிப்ஸ்! வெற்றிலை & தேங்காய் வசியம்


தனுசு: மறைமுகமான திறமைகள் வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள் என்று சொல்லலாம். குழப்பங்கள் விலக, வியாழக்கிழமைகளில் விஷ்ணுவை வணங்கவும். 


மகரம்: பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால், வாழ்க்கை சிறக்கும். புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும், அதற்காக மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் வழிபடவும்.  


கும்பம்: குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும்.  சுக்கிரனின் பெயர்ச்சியால் கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க குலதெய்வ வழிபாடு அவசியம்


மீனம்: மாளவ்ய ராஜயோகம் உங்களுக்கு, சுபகாரியம் தொடர்பான எண்ணங்களை தோன்ற வைக்கும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறைய வேண்டுமானால், சிவனுக்கு வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்யவும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மேஷ ராசியில் உதயமாகும் குரு பகவான்! குபேரனின் அருளை பெற்றுத் தரும் குரு சஞ்சாரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ