சூரியன் ராசி மாற்றம்: அடுத்த வாரம் முதல் இந்த ராசிகள் காட்டில் மகிழ்ச்சி மழை
Sun Transit: 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும்.
சூரியனின் ராசி பரிவர்த்தனை: பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியை விட்டு விலகி கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும்.
சூரியப் பெயர்ச்சியின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
சிம்மம்:
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகரமான காலகட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சிம்ம ராசியில் இருந்து சூரிய பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் இரண்டிலும் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வீடு பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது.
சூரியனின் சஞ்சாரத்தின் போது திடீர் பண வரவுகள் உண்டாகும். உங்களது பணம் நீண்ட காலமாக ஏதோ ஒரு இடத்தில் சிக்கி இருந்தால், இப்போது அது மீண்டும் கிடைப்பதற்கான காலம் வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். பணியில் இடமாற்றமும் ஏற்படலாம். இந்த இடமாற்றம் பல அனுகூலமான பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். இந்த இரண்டு சூழ்நிலைகளும் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
மேலும் படிக்க | சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு மகாபுருஷ ராஜயோகம்: நல்ல காலம் ஆரம்பம்
தனுசு:
இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் பணி நடை சிறப்பாக இருக்கும். இது சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் இருந்தால், அதில் இப்போது வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11ஆம் வீட்டில் நடப்பதால், இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இது வருமானம் மற்றும் லாபத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது திடீர் பண ஆதாயத்தையும் நாம் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் நன்றாக அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு இந்த நேரத்தில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். இதன் மூலம் பல மடங்கு லாபத்தை அதிகரிக்க முடியும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீங்கள் சொத்து மற்றும் வாகனம் வாங்க நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இது முதலீட்டுக்கான நேரம். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு வருங்காலத்தில் அதிகப்படியான லாபத்தை அள்ளித்தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யுதி தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள்? யாருக்கு சுக்கிரனால் பாதிப்பு அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ