12 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் குரு; ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் வரை பொற்காலம்!

குரு வக்ரி 2022: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழன் எனப்படும் குரு பகவான், தனது ராசியான மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆன நிலையில், நவம்பர் 24 வரை இந்த நிலையில் நீடிப்பார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2022, 08:22 PM IST
  • வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியினால் திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்.
  • வியாழன் உங்கள் பத்தாவது வீட்டில் வக்ர நிலையில் இருக்கிறார்.
12 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் குரு; ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் வரை பொற்காலம்! title=

மீனத்தில் குரு வக்ர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது நிலையை மாற்றுகிறது. கிரகங்கள் அவற்றின் நிலையை மாற்றுவது, அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தற்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழன் கிரகம் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளது. வியாழன் கிரகம், இந்த நிலையில் நவம்பர் 24 வரை நீடிப்பார். வியாழனின் வக்ர பெயர்ச்சி பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதித்தாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலனை கொடுக்கப் போகிறது. வியாழனின் வக்ர பெயர்ச்சியினால், இந்த 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் தொழிலில் பொன்னான வெற்றியைப் பெறுவார்கள்.

ரிஷபம்:

மீன ராசியில் வியாழன் வக்ர  பெயர்ச்சி, இவர்களுக்கு பொன்னான காலத்தை தொடங்கியுள்ளன. இந்த ராசியிலிருந்து வியாழன் 11வது இடத்தில் வக்ர நிலையில் சென்றுள்ளது. இது வருமானம் மற்றும் லாபம் தரும் இடமாக கருதப்படுகிறது. வியாழனின் வக்ர நிலையினால், இவர்களின் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. புதிய வழிகளிலும் வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலம், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். குரு பகவான் எனப்படும் வியாழன் கிரகம்,  ரிஷப ராசிகளின் ஜாதகத்தில் 8ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால், ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். நாள்பட்ட நோயினால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடலாம்.

மிதுனம்:

இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். வியாழன் உங்கள் பத்தாவது வீட்டில் வக்ர நிலையில் இருக்கிறார்.  இந்த வீடு வேலை, வணிகம் மற்றும் பணி தொடர்பான வீடாக கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு வரலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய ஆர்டர் லாபம் தரும். புதிய தொழில் உறவுகள் உருவாகும். வியாபாரம் விரிவடைந்து நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 

மேலும் படிக்க | குரு-சந்திரன் இணைவினால் கஜகேசரி ராஜயோகம்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

கடகம்:

வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியினால் திடீர் பண ஆதாயம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாழன் உங்கள் ஜாதகத்தின் ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலையில் இருக்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கான வீடாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறி, அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக குறுகிய அல்லது நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெளிநாடு தொடர்பாக வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். ஜாதகத்தின் ஆறாவது வீட்டின் அதிபதி வியாழன். இது நோய், நீதிமன்றம் மற்றும் எதிரி சம்பந்தமான வீடு என்று கருதப்படுகிறது. மீனத்தில் வியாழன் வக்ர நிலையில் இருப்பதால், தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். இதனுடன், உங்கள் ராசியின் அதிபதியான சந்திரனுடனான நட்பு உணர்வின் காரணமாக இந்த  வக்ர பெயர்ச்சி வெற்றிகளை அள்ளித் தருவதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

 மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News