தீபாவளிக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம்: இந்த ராசிகளுக்கு நெருக்கடி, எச்சரிக்கை தேவை
Surya Grahan: ராசிகளை பாதிக்காத கிரகணம் என்பது இருக்க முடியாது. சில ராசிக்காரர்களுக்கு, இந்த கிரகணம் மிகவும் மங்களகரமான நேரத்தைக் கொண்டுவருகிறது. சிலருக்கு இந்த கிரகணம் மிகவும் மோசமாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டின் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் தீபாவளி பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், நீதிக்கடவுளான சனி பகவான், வக்ர நிலையை மாற்றி தனது இயல்பான நிலைக்கு திரும்ப உள்ளார். இது அனைத்து ராசிகளிலும் பல வித ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். தீபாவளிக்கு அடுத்த நாள் மாலை, அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி மாலை, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை சென்று அடைய முடியாத நிலை ஏற்படும். அந்த வானியல் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
அக்டோபர் 25 ஆம் தேதி நிகழவுள்ள சூரிய கிரகணத்தின் தாக்கம் இந்தியாவிலும் காணப்படும். சூரிய கிரகணம் மாலை 4:40 முதல் 5:24 வரை இருக்கும். கிரகணத்தின் சூத காலம் இதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும். இந்த சூரிய கிரகணத்தின் துவக்கம் இந்தியாவில் இரவு 11.28 மணிக்கு நிகழும். இதன் பிறகு சுமார் 07:05 மணி நேரத்திற்குப் பிறகு மாலை 5.24 மணிக்கு இது நிறைவடையும். கிரகணத்தின் சூதக காலம் 12 மணி நேரத்திற்கு முன் அதாவது அக்டோபர் 24 இரவு 11:28 மணி முதல் தொடங்கும். ஆகையால், தீபாவளிக்கு மறுநாள் காலை கிரகணத்தின் சூதக காலத்தில் இருக்கும்.
சாஸ்திரங்களின்படி, சூதக காலத்தில் சிலை வழிபாடு செய்யக்கூடாது. இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உணவுப் பொருட்களில் தர்பை, துளசி இலைகள் போன்றவை வைக்கப்படுகின்றன. இது தவிர, கோயில்களிலும் கிரகணம் முடிந்து சுத்தம் செய்த பிறகே வழிபாடுகள் தொடங்கும். வீடுகளிலும் கிரகண காலத்திற்கு பிறகு, அனைவரும் குளித்து, வீடுகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை கிரகணத்தின் தொடுதல் நிலை இந்தியாவில் மட்டுமே இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்!
ராசிகளில் பாதிப்பு:
ராசிகளை பாதிக்காத கிரகணம் என்பது இருக்க முடியாது. இந்த கிரகணத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். சில ராசிக்காரர்களுக்கு, இந்த கிரகணம் மிகவும் மங்களகரமான நேரத்தைக் கொண்டுவருகிறது. சிலருக்கு இந்த கிரகணம் மிகவும் மோசமாக இருக்கும். தீமைகள் மற்றும் நன்மைகள் ஒருபுறம் இருக்க, பொதுவாக கிரகண காலத்தில் இறைவனின் பெயரை ஜபம் செய்வது நல்லது.
இந்த கிரகணம் மீன ராசிக்காரர்களுக்கு சற்று பாதகமாகவும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும் இருக்கும். இதுதவிர தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தால் பலன் கிடைக்கும். தீபாவளி நேரத்தில், சூரிய கிரகணம் மற்றும் சனியின் நிலை மாற்றம் ஆகிய நிகழ்வுகளும் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பாதிப்பை ஏற்படுத்தும். உஷாராக இருக்க வேண்டிய அந்த ராசிகளை பற்றி காணலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் சூரிய கிரகண காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களுக்கு சூரிய கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்கார்ரகள் கவனமாக இல்லையென்றால் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்போது முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், இப்போது கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது அதிக கவனம் தேவை. விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையாய் இருப்பது நல்லது. பணி இடத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிதுனம்:
தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழவுள்ள சூரிய கிரகணம் மிதுன ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொண்டு வரும். திருமண உறவுகளில் மன கசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணி இடத்திலும் வியாபாரத்திலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றம்: திரிகோண ராஜயோகத்தால் பண மழையில் நனையப்போகும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ