சனியின் புதிய அவதாரம்; அதிர்ஷ்டத்தை அள்ள காத்திருக்கும் ராசிகள்

வக்ர நிலையில் இருந்த சனி பகவான் மீண்டும் அதில் இருந்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டதால் சில ராசிகளுக்கு யோகம் பிறக்கப்போகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 19, 2022, 06:11 AM IST
சனியின் புதிய அவதாரம்; அதிர்ஷ்டத்தை அள்ள காத்திருக்கும் ராசிகள் title=

மகர ராசி அதிபதியான சனி, வக்ர நிலையில் இருந்து வந்துவிட்டதால் பல ராசியினருக்கு தொழில் வளர்ச்சி, நிதி நிலை முன்னேற்றம், பணி தொடர்பான கஷ்டங்கள் நீக்கி நல்ல பலன்களை வழங்க இருக்கிறார். இவர் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சென்றார். ஜூன் 5ம் தேதி கும்பத்தில் வக்ர நிலை அடைந்து, ஜூலை 12ல் மகர ராசிக்கு வக்ர நிலையில் திரும்பினார்.தற்போது அக்டோபர் 23ம் தேதி மகரத்தில் வக்ர நிலை முடிந்து, மீண்டும் நேர்கதியில் பயணிக்க உள்ளார். சனி பகவானின் இந்த அமைப்பால் சில ராசியினருக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கி அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்க இருக்கின்றனர். 

மேஷம் 

மேஷ ராசிக்கு, மகர ராசியில் சனி பகவானின் நேர் பயணத்தின் சஞ்சாரம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சனி பகவானின் தாக்கத்தால் மேஷ ராசிக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு என வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மின்சாதனப் பொருட்கள், வாகனத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த நேரம் நல்ல தொழில் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடை வியாபாரத்திலும் லாபம் உண்டாகும்.

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனியிலும், சனி பகவானின் அருளைப்பெறும் ‘3’ ராசிகள்! 

​துலாம் 

துலாம் ராசிக்கு உங்கள் தகுதிக்கேற்ப பொன்னான வாய்ப்புகள் அமையும். ராசிக்கு 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் சனி பகவானால் திடீர் வருமான வாய்ப்புகள் உண்டாகும். ஆடை, அணிகலன் வாங்கும் யோகம் உண்டு. குழந்தைகள் முன்னேற்றத்திற்காக புதிய விஷயங்களை செய்வீர்கள்.`

​விருச்சிகம் 

விருச்சிக ராசிக்கு சனியின் அமைப்பு மிகவும் அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் வண்டி, வாகனம் வாங்கும் முயற்சி பலிக்கும். வாகன வகையில் நன்மைகள், ஆதாயம் உண்டாகும். சொத்து சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சியை அடைவீர்கள். சகோதர சகோதரிகளிடமிருந்து அனைத்துவிதமான ஆதரவு கிடைக்கும். உங்கள் பயணங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடினமான உழைப்பால் வியாபாரத்தில் மேன்மை பெறுவீர்கள். கடின உழைப்பின் பலனை பெற்றிட முடியும்.

​சிம்மம் 

சிம்ம ராசிக்கு சனியின் அமைப்பானது நன்மைகள் தருவதாக இருக்கும். பணவரவு சிறக்கும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். ஏதேனும் புதிய வாய்ப்புகள் கிடைத்தல், புதிய வழியில் பணம் வருதல் என இருக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் உங்களின் செலவும் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் வைக்கவும். தொழில் ரீதியாக நீங்கள் பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம்.

​மீனம் 

மீன ராசிக்கு சனி பகவானின் அமைப்பால், எதிலும் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பல பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம், இந்த நேரத்தில் நீங்கள் புனித யாத்திரை செல்வதற்கான திட்டத்தையும் செய்யலாம். இதுவரை வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தவர்களுக்கு சனியின் அமைப்பால் நல்ல காலம் தொடங்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள், வீட்டில் நிலவும் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News