ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்!

சூரிய கிரகணம்: இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு நாள் கழித்து ஏற்படும் இந்த கிரகணம், 2022ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 18, 2022, 04:09 PM IST
  • 27 ஆண்டுகளுக்கு முன்பு 1995-ம் ஆண்டு தீபாவளியன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.
  • இந்து மதத்தில் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
  • வெவ்வேறு ராசிக்காரர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுக்கிறது.
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்! title=

சூரிய கிரகணம்: இந்து மதத்தில் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஐப்பசி மாத அமாவாசை அன்று நாடு முழுவதும் தீபாவளித் திருவிழா கொண்டாடப்படுகிறது. முன்னதாக, 27 ஆண்டுகளுக்கு முன்பு 1995-ம் ஆண்டு தீபாவளியன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு நாள் கழித்து ஏற்படும் இந்த கிரகணம், 2022ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகும். சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணிவரை நிகழும். இது வெவ்வேறு ராசிக்காரர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுக்கிறது.

சூரிய கிரகணத்திற்கான ராசி பலன்கள்

மேஷம் - இந்த சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையை குழப்பத்தில் வைத்திருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம் - சூரிய கிரகணம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்க உள்ளது. அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுனம் - இந்த வருட சூரிய கிரகணம் மிதுன ராசிக்காரர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். மிதுன ராசிக்காரர்கள் இதனால் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம் - கடக ராசிக்காரர்களும் இந்த சூரிய கிரகணத்தில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது அவர்களுக்கு வேதனையாக இருக்கலாம்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிரகணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த கிரகணத்தால் உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்போ அல்லது சாதகமான பலன்களோஇரண்டும் இருக்காது.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

கன்னி - இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த கிரகணத்தின் பலன் காரணமாக நீங்கள் பணத்தை இழக்க நேரிடும்.

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் பாதகமான பலன்களை கொடுக்கிறது. கிரகணத்தின் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் - இந்த ராசிக்காரர்களும் இந்த சூரிய கிரகணத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் சில இழப்புகள் ஏற்படலாம்.

தனுசு ராசி - தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் சில நல்ல செய்திகளைத் தரப் போகிறது. விரைவில் சில மனதிற்கு மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும்.

மகரம் - தனுசு ராசிக்காரர்களைப் போலவே மகர ராசிக்காரர்களும் நல்ல செய்திகளைக் கேட்க தயாராக இருக்கலாம். விரைவில் நீங்கள் பெரிய பலன்களைப் பெறப் போகிறீர்கள்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு அறிவுரை என்னவென்றால் எதையும் யோசித்து பேச வேண்டும். இதனால் உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை பாதிக்கப்படலாம்.

மீனம் - இந்த சூரிய கிரகணம் மீன ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு மன வலியை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News