புதாதித்ய ராஜயோக பலன்கள்: ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். தற்போது மிதுன ராசியில் புதனும் சூரியனும் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், துலாம், மகரம், கும்பம், மீனம், தனுசு என 12 ராசிகளில் யாருக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட நேரத்தில் ராசிகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் தான் இருக்கும் ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். சூரியனின் இந்த சஞ்சாரத்தால், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் சிலருக்கு நேர்மறையான பலன்களும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களும் ஏற்படுகிறது.


அதேபோலத் தான், ஜூன் 14-ம் தேதி சூரியன் மிதுன ராசியில் பிரவேசித்தது. சூரியப் பெயர்ச்சியின்போது புதன் மிதுன ராசியில் இருந்தார். இரண்டு கிரகங்களும் தற்போது ஒரே ராசியில் இருப்பதால் புத்தாதித்ய ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த இணைவின் பலன் ஜூன் 29 வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். இதில் 3 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், பெயரும் கிடைக்கும். சூரியன், புதன் ஆகிய இரு சுப கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் புதாதித்ய யோகம் மங்களகரமானது. இதில் யாருக்கு புதாதித்ய யோகம் நன்றாக இருக்கும் என தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...


மிதுனம்


மிதுன ராசியில் சூரியனும் புதனும் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது அப்படிப்பட்ட நிலையில் மிதுன ராசிக்காரர்கள் வெற்றியை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது, இதனால் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு, வாய்ப்புகள் கதவுகளைத் தட்டும், வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும்.


சிம்மம் 


மிதுன ராசியில் உருவாகியுள்ள புத்தாதித்ய ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்தும் பணம் வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் நல்லபடியாக முடிவடையும். தொழிலில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் இது. பொருளாதார நிலை வலுப்பெறும். 


ரிஷபம்


புத்தாதித்ய ராஜயோகம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த நேரத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணம் மற்றும் வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைத்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொருளாதார நிலைய வலுவாக மாற்றும் புதாதித்ய யோகம், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து வைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ