குரோதி ஆண்டு ஆனி மாதம் 15ம் நாள் சனிக்கிழமை ஜூன் 29 ராசிபலன்கள்!
Daily Rasipalan 2024 June 29 : 2024 ஜூன் 29, 12 ராசிகளுக்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம்... நவகிரகங்களின் இருப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ராசிபலன்கள் உங்களுக்காக...
Daily Astro : நமது செயல்களுக்கு ஏற்றவாறே நமது வாழ்க்கை அமைகிறது. அது எப்படி இருக்கும் என்பதை ஊகமாக கணிக்கும் ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம். குரோதி ஆண்டின் ஆனி 15ம் நாள் தேய்பிறை அஷ்டமி, உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய இன்று 29-06-2024 சனிக்கிழமை ராசி பலன்கள்...
மேஷம்
எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவினர்களின் வழியில் நெருக்கடியான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
ரிஷபம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடனை அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் உதவிகளை தேடுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாகம் தொடர்பான துறைகளில் மேன்மை உண்டாகும்.
கடகம்
பணி நிமித்தமான அலைச்சல் குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கலைத்துறைகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும்.
மேலும் படிக்க | ஸ்ரீ சக்கரம் வழிபாட்டின் மகத்துவம்! லலிதா திருபுர சுந்தரியை வணங்கும் வழிமுறைகள்!
சிம்மம்
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபார விஷயங்களில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.
கன்னி
வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும்.
துலாம்
நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். பழைய சரக்குகள் மூலம் லாபங்கள் மேம்படும். கால்நடை சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள்.
விருச்சிகம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் உற்சாகம் பொங்கும், கலை துறையில் ஆர்வம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான செயல்களில் கவனம் வேண்டும். அதிகாரிகளின் வழியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
மேலும் படிக்க | பணமழையில் நனைய வேண்டுமா? அன்னை லட்சுமி அருளுடன் செல்வந்தனாக வழிபாடு!
தனுசு
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் மறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் புதிய வியூகங்களை செயல்படுத்துவீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் அமையும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள்.
கும்பம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய அத்தியாயம் பிறக்கும்.
மீனம்
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் கோபமின்றி செயல்படுவது நல்லது. வியாபார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. அக்கம்-பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ