தனித்திருந்தால் கெட்டது செய்யும் குரு! சேர்ந்திருந்தால் சூப்பர் பலன்களைக் கொடுக்கும் மாயம் என்ன?

Guru And Rahu Conjunction : குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2024, 09:38 PM IST
  • குருவுடன் எந்த கிரகம் இணைந்தால் நல்லது?
  • ஐந்தில் குரு யாருக்கு என்ன செய்வார்?
  • ராகுவும் குருவும் இணைந்தால் குரு சண்டாள யோகம்
தனித்திருந்தால் கெட்டது செய்யும் குரு! சேர்ந்திருந்தால் சூப்பர் பலன்களைக் கொடுக்கும் மாயம் என்ன? title=

ஜோதிடத்தில், குரு பகவானுக்கு ஒருவிதமான முக்கியத்துவம் உள்ளது என்றால், ராகு பகவானுக்கு வேறு விதத்தில் முக்கியத்துவம் உண்டு. குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது ராகுவை குரு பார்க்கும் இடத்தில் அதாவது ராசியில் க்ரு இருந்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த குரு சண்டாள யோகத்தால் எதிர்பாராத விதமாக திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.

குருவும் ராகுவும் ராசிமண்டலத்தில் எந்த வீட்டில் இருந்தாலும் பலன்கள் ராசிக்கு ஏற்ப மாறுபடும். அவற்றைத் தெரிந்துக் கொள்வோம். 

குரு பகவான்
சுப கிரகமான குருவின் பார்வைக்கே ஒரு சக்தி உண்டு. குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழியே இதை உறுதிப்படுத்த போதுமானது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது ஜோதிடம் சொல்லும் விதிமுறையாகும். அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார் எந்த வீட்டில் பார்வை படுகிறது என்பதும், குருவின் ஆதிபத்தியம் என பல்வேறு விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. ஏனென்றால், குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குரு பகவான், லக்னத்திலோ அல்லது 2, 5, 10 என சில வீடுகளில் தனித்து இருக்கும்போது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்காது.  

மேலும் படிக்க | மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை..

லக்னத்தில் குரு

அதிலும், குரு லக்னத்தில் இருந்தால், அந்த ஜாதகர் மிகப்பெரிய குழப்பவாதியாக இருப்பார். இரண்டாம் பாவகத்தில் இருப்பது தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். குறிப்பாக இரண்டாம் பாவகத்தில் இருக்கும் குரு, வேறொரு கிரகத்துடன் சேர்ந்து இருப்பது நல்லது.

ஐந்தில் குரு

ஐந்தாம் வீட்டில் குரு இருப்பது புத்திர தோஷம் புத்திர சோகம் ஏற்படுத்தும் என்றால், ஏழாம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும் சுப கிரக ஆதிக்கம் உள்ள குரு, ஏழாம் இடத்தில் இருந்தால், கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. அதிலும் இந்த இடத்தில் குரு தனித்து இருந்தால், திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை போராட்டமாக அமையும்.லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் குரு தனித்திருந்தால், வியாபார தொழில் உத்தியோகம் என ஜீவன ஸ்தானத்தில் நஷ்டம் ஏற்படும். 

குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால், ராகுவை குரு பார்ப்பதனால் குரு சண்டாள யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் இந்த யோகம், திடீர் உயர்வையும் எதிர்பாராத பண வரத்தையும் கொடுத்து வறுமையில் இருப்பவரையும் குபேரராக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் உண்டாகி சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மேலும் படிக்க | தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...

குருவும் ராகுவும் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? தெரிந்துக் கொள்வோம்.

மேஷத்தில் குருவும் ராகுவும் இருந்தால், வாக்கு சாதுரியம் அதிகம் இருக்கும். மாற்றி மாற்றி பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், பண வரவிற்கு பஞ்சம் இருக்காது. ரிஷபத்தில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால், இவர்களுக்குப் பிறகு பிறக்கும் இளைய சகோதர சகோதரிகள் பெரிய அளவில் சாதிப்பார்கள், அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள்.

மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால், அம்மாவுக்கு அடிக்கடி உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். கடகத்தில் குருவும் ராகுவும் இணைந்தால், பூர்வீக சொத்து விஷயத்தில் பிரச்சனைகள் வரும். சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்கு சந்தையில் வெற்றிகரமாக செயல்படுபவர்களாக இருப்பார்கள். 

கன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே உதவிகள் கிடைக்கும், வாழ்க்கை இனிக்கும். துலாம் ராசியில் குருவும் ராகுவும் இருந்தால் சண்டைக்காரர்கள் மற்றும் எதிர்மறையானவர்களுடன் தொடர்பு ஏற்படும். விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டு முன்னேறும் குணம் இருக்கும். 

தனுசு ராசியில் குருவும் ராகுவும் இணைந்து இருந்தால் பல துறைகளில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரிகள் மிகுந்த அன்புடனும் அனுசரணையாகவும் இருப்பார்கள். 

கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் ஆன்மீக தொடர்பு இருக்கும். யோகா, தியானம் தொடர்பான விஷயங்களில் வித்தகர்களாக இருப்பார்கள். பழைய விஷயங்களை மறக்க மாட்டார்கள். மீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால், எந்தவொரு விஷயத்தையும் அக்குவேறு ஆணிவேராக அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்து விடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பணமழையில் நனைய வேண்டுமா? அன்னை லட்சுமி அருளுடன் செல்வந்தனாக வழிபாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News