பணமழையில் நனைய வேண்டுமா? அன்னை லட்சுமி அருளுடன் செல்வந்தனாக வழிபாடு!

Goddess Lakshmi Worship : செல்வத்திற்கான கடவுள், மும்மூர்த்திகளில் ஒருவரான மஹா விஷ்ணுவின் துணைவி அன்னை லட்சுமியை வழிபட்டால் பணக்குறை என்ற மனக்குறையே இல்லாமல் வளமாய் வாழலாம்

செல்வத்தின் அம்சமாக திகழும் அன்னை மகாலட்சுமியை வழிபட்டு பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம். லட்சுமி சொரூபங்கள் என்று அழைக்கப்படும் மகாலஷ்மி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் அன்னையின் திருவருளைப் பெற்று பணக்காரராகலாம்...

1 /9

திருவோண விரதம் இருந்தாலும், சத்ய நாராயண பூஜை செய்யும் இடத்திலும், தெய்வங்களை தொழும் பக்தர்களின் மனதிலும், தர்ம சிந்தனை உடையாரின் உள்ளத்திலும் லட்சுமி அன்னை வாசம் புரிவார். ஆனால், அன்னையின் அருளைப் பெற வணங்க வேண்டிய பொருட்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

2 /9

தாமரை செல்வத்தைக் கொடுக்கும். தாமரை மலரை செல்வத்தின் குறியீடாகவே பார்க்கலாம். எனவே தான் தாமரையில் அமரும் அன்னையை மலர்மகள் என்று அழைக்கிறோம்.  திருமகளுக்குரிய இடம் தாமரை, எனவே தாமரையை வணங்கினாலே அன்னை லட்சுமியை வணங்கியதாகவே பொருள் கொள்ளலாம்

3 /9

திருமகள், திருமாலின் மார்பில் உறைவதால் தான், பெருமாளை திருவுறைமார்பன் ஸ்ரீநிவாசன் என்று அழைக்கிறோம். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது.அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே என்பதால், பெருமாலை வணங்கினால், திருமகளின் அருள் நிச்சயம் உண்டு.

4 /9

செல்வத்திற்கு அதிபதியான குபேரரின் அருளைப் பெற அன்னையை வணங்க வேண்டும். அன்னையை வணங்கினாலே குபேரரையும் வணங்கியதாக பொருள்

5 /9

நெல்லிக்கனியில் திருமகள் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம், எனவே நெல்லிக்கனியை உண்பதும், அதை பூஜையில் பயன்படுத்துவதும் செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும்

6 /9

வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்தரத்தில் மகாலஷ்மி தோன்றினாள். எனவே வில்வத்தைக் கொண்டு அன்னையை வணங்கினால் பண வரவு நிச்சயம்

7 /9

வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் லட்சுமி வாசம் செய்கிறார்

8 /9

விளக்கில் லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். தினசரி வீட்டில் விளக்கேற்றினால் அங்கு செல்வ செழிப்பு நிச்சயம் இருக்கும்

9 /9

பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் உள்ளது என்பது இந்து மத நம்பிக்கை. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் தான் கோமாதா பூஜையின் போது, லட்சுமி வாசம் செய்யும் பசுவின் பின்புறத்தை கும்பிடுவது வழக்கம்