புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், பண மழையில் நனைவார்கள்
New Year Horoscope: அடுத்த ஆண்டு செல்வச்செழிப்பில் நனையப்போகும் ராசிகள் எவை, யாருக்கு பணக்கார யோகம் உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். இந்த ராசிகள் அன்னை லட்சுமியின் பரிபூரணமான அருளை பெறுவார்கள்.
புத்தாண்டு ராசிபலன்: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. வரவிருக்கும் ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். ஜோதிட அறிவியலைக் கொண்டு, நம் எதிர்காலத்தில் என்ன நடக்கவுள்ளது என்பதை ஓர் அளவிற்கு நாம் தெரிந்துகொள்ளலாம். அந்த அடிப்படையில் அடுத்த ஆண்டு செல்வச்செழிப்பில் நனையப்போகும் ராசிகள் எவை, யாருக்கு இந்த ஆண்டு பணக்கார யோகம் உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். இந்த ராசிகள் அன்னை லட்சுமியின் பரிபூரணமான அருளை பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் லட்சியவாதிகள் என்றும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தயாராக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேஷ ராசிக்காரர்கள் தங்களின் பேரார்வம் மற்றும் அனைத்தையும் விரைவாகப் பெற வேண்டும் என்ற ஆசையால் வெற்றியின் உச்சத்தைத் தொடுவார்கள். அவர்கள் தங்கள் முன்னுரிமையை அமைத்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம், அவர்கள் வாழ்க்கையில் பெற விரும்பும் அனைத்தையும் பெற முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மிகவும் கடினமாக உழைப்பவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டில் அதிக பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள், இந்தப் பழக்கம் அவர்களுக்கு வெற்றியைப் பெற உதவியாக இருக்கும்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் இயற்கையாக மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பெரிய முடிவுகளை எடுத்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுவார்கள். அனைத்து வித சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த ராசிக்காரர்களும் மிகவும் அன்பானவர்கள்.
மேலும் படிக்க | தனுசில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு 2023 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும்
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முழுமை பெற விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய எப்போதும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்கள் செல்வந்தராக வேண்டும் என்ற ஆசையு கொண்டால், விரைவில் செல்வந்தர்களாகலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அடுத்த வருடம் பணக்காரர்களாக மாற வேண்டும் என்றால், அவர்கள் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் அவர்களின் இந்த திறன் அவர்களை வெற்றியடையச் செய்யும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து செயல்படுவதில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்த பழக்கமும் அவர்களுக்கு நன்மை பயக்கும்.
இந்த ராசிகளைத் தவிர, மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும் இந்த ஆண்டு செல்வந்தர்களாக மாறலாம். ஆனால் அவர்கள் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் பொதுவான தகவல்கள் மற்றும் பல்வேறு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ மீடியா இவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி: அவதியில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான், பரிகாரங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ