புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி: அவதியில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான், பரிகாரங்கள் இதோ

New Year 2023 Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். வாழ்க்கை வலி மிகுந்ததாக மாறக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2022, 06:44 PM IST
  • மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கலாம்.
  • உடல்நலம் விஷயத்திலும், அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • இந்த காலத்தில், மற்றவர்களை கண்டிப்பதை தவிர்க்கவும்.
புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி: அவதியில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான், பரிகாரங்கள் இதோ title=

புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புதிய உத்வேகம், புதிய நம்பிக்கை, புதிய உற்சாகத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கையிலும், அந்த ஆண்டை தங்களுக்கு சிறந்ததாக்க அனைவரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டிலும், கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களால், சில ராசிகள் அபரிமிதமான நற்பலன்களையும், சில ராசிகள் சுமாரான பலன்களையும் அனுபவிப்பார்கள். சில ராசிகள் அனுகூலமற்ற பலன்களையும் அனுபவிக்க வேண்டி வடும். 

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சனி பகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். அதன் விளைவுகள் அனைத்து ராசிகளிலும் தெரியும். சனிப்பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். வாழ்க்கை வலி மிகுந்ததாக மாறக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியின் கோபத்திலிருந்து தப்பிக்கவும், இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சனிபகவானை அமைதிப்படுத்த ஜோதிடத்தில் சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சனியின் கோபத்தை என்னென்ன நடவடிக்கைகளால் தவிர்க்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

2023 ஆம் ஆண்டு இந்த நாளில் சனி பகவான் ராசி மாறுவார்

வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுவார். சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார். இப்படிப்பட்ட நிலையில் ஜனவரி 17ல் கும்ப ராசியில் சஞ்சரித்த பின்னர் சனி 2024ல் எந்த ராசிக்கும் மாற மாட்டார். இதற்குப் பிறகு, 2025-ம் ஆண்டு மார்ச் 29 அன்று அவர் மீன ராசியில் பெயர்ச்சியாவார்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் மாறும்போது அல்லது வக்ர நிலையில் செல்லும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசியில் பிரவேசிக்கவுள்ளார். இதனால் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கலாம். உடல்நலம் விஷயத்திலும், அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில், மற்றவர்களை கண்டிப்பதை தவிர்க்கவும். அதே சமயம் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குவதால், அவர்களுக்கும் சிறப்பு கவனம் தேவை. கோபம் மற்றும் ஆணவத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.

மேலும் படிக்க | Venus Dosh: பேர் மட்டும் தான் லட்சுமி நாராயண தோஷம்! உஷராக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள் 

சனிபகவானின் கோபத்தை தவிர்க்க இவற்றை எல்லாம் செய்யலாம்

- இந்த காலகட்டத்தில் ​​யாருக்கும் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.

- பெண்களை மதிக்கவும்.

- சனி சாலிசா பாராயணம் செய்வது நன்மை தரும்.

- சனியின் கோபத்தைத் தவிர்க்க கோளறு பதிக, சனி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யவும்.

- சனியின் அசுப பலன்களைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி கோவிலில் தீபம் ஏற்றவும்.

- உங்களால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Shani+Mercury+Venus: 3 கிரகங்களில் இணைவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News