குருப் பெயர்ச்சியால் துன்பத்தை சுமக்க வேண்டிய ராசிகள்! பரிகாரங்கள் பலன் தருமா?

Jupiter transit: 2023-ம் ஆண்டு பல முக்கிய கிரகங்களின் ராசி மாறும். இத்தகைய சூழ்நிலையில், குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பாதகமாக இருக்கும்.

Last Updated : Dec 14, 2022, 03:02 PM IST
  • குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பாதகமாக இருக்கும்
  • புதிதாக வேலை தேடுபவர்கள் எச்சரிக்கை தேவை
  • மனதில் குழப்பங்கள் நிலவும்
குருப் பெயர்ச்சியால் துன்பத்தை சுமக்க வேண்டிய ராசிகள்! பரிகாரங்கள் பலன் தருமா? title=

கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை ஜோதிடம், ஜனவரி மாதம் 25ம் தேதி  குரு பெயர்ச்சியாகிறார். வேறு சில கிரகங்களின் பெயர்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் குருவின் பெயர்ச்சி தை மாதத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால்,  வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறைவே இருக்காது. வியாழன் ராசியை மாற்றினால், அறிவு, வளர்ச்சி, கல்வி, சந்ததி, தந்தை மகன் உறவு போன்ற அனைத்து விஷயங்களிலும், தாக்கத்தை ஏற்படுத்தும்.

சூரியனின் சங்கராந்தியும் இணைந்தால், குருவின் பலன்களில் மாற்றங்களும் எதிரொலிக்கும். இரண்டு பலன்களுடன் இணைந்து 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலவலாம். தேவகுரு பிருஹஸ்பதியின் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அதிகரிக்கிறது. 2023-ம் ஆண்டு குருவின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டமும், வேதனையும் ஏற்படலாம். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். பணம் சம்பாதிக்க புதிய வழிகளை தேட வேண்டிய அவசியம் ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.  

ரிஷபம்:  

ரிஷப ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் எந்த சிக்கலும் வராது என்றாலும், பணியிடத்தில் சூழல் மாறும் வாய்ப்புகள் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். முன்னேற்றம் எதிர்பார்த்த அளவில் இருக்காது. பண ஆதாயம் கிடைத்தாலும் மனதில் மகிழ்ச்சி இருக்காது.

மேலும் படிக்க | 2023 ஜனவரி 17ம் தேதி சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகளும் பரிகாரங்களும் 

தனுசு

குருவின் சஞ்சாரத்தின் போது, ​​அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்காது. வருமானம் அதிகரிக்கும், லாபம், வெற்றி  என அனைத்தும் கிடைத்தாலும், மனதில் வெறுமை இருக்கும். கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கும்.  

கும்பம்:

குருவின் சஞ்சாரத்தின் போது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள், மீண்டும் தள்ளிப் போடும் சுழ்நிலை ஏற்படலாம். மாணவர்கள் அதிக கவனமாக இருந்தால் வெற்றி பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பணத்தை அள்ளும் லக்கி ராசிக்காரர் நீங்களா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News