ஜோதிடம்: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து ராசிக்காரர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் இயல்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் சில பலங்களும் சில குறைபாடுகளும் உள்ளன. தனிப்பட்ட குணாதிசயங்களை தவிர, சிலருக்கு அதிர்ஷ்டம் காரணமாகவும், விரைவாக வெற்றி கிடைக்கும். எனினும், சிலருக்கு கடினமாக உழைத்த பிறகுதான் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு நபரின் இயல்பும், விருப்பு வெறுப்புகளும் அவரவர் ராசியின் அடிப்படையில் அமைகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்புகளும் வேறுபடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரது ராசியின் அடிப்படையில் அவரது இயல்பு, எதிர்காலம், ஆளுமை ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ள முடியும். பெருமையுடனும் ஆடம்பரமாகவும் வாழ விரும்பும் நபர்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இவர்களுக்கு பணத்தை சேர்த்து வைப்பதில் நாட்டமே இருக்காது. பணத்தை சிறிதும் யோசிக்காமல் செலவு செய்யும் நபர்கள் இவர்கள். 


மீனம்


ஜோதிட சாஸ்திரத்தின் படி, மீன ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். கலை மற்றும் விளையாட்டில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சுகபோகங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவர்கள் பணம் சம்பாதிக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இதுமட்டுமின்றி, பிராண்டட் பொருட்களுக்கு அதிக பணம் செலவழிப்பபார்கள். 


இந்த நபர்கள் பயணம் செய்வதை விரும்புகிறார்கள். ஆகையால், இவர்கள் பணத்தை சிறிதும் யோசிக்காமல் செலவிடுகிறார்கள். இவர்களுக்கு எதிலும் எந்த குறையும் இருக்கக்கூடாது. ஒரு விஷயத்தை செய்ய முடிவு செய்துவிட்டால், அதை செய்த பின்னரே இவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். 


மேலும் படிக்க | மாத ராசிபலன்: டிசம்பரில் இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஆரோக்கியம் படுத்தும், ஜாக்கிரதை 


துலாம்


துலாம் ராசிக்காரர்களும் பெருமையுடன் வாழ விரும்புவார்கள். இதுமட்டுமின்றி, பணத்தை செலவழிக்கும் விஷயத்திலும் இவர்கள் சற்று தாராளமானவர்களே. வாழ்க்கையில் பணம் சேர்ப்பது பற்றி இவர்கள் நினைப்பதெ இல்லை. இந்த ராசிக்காரர்களின் ஆட்சிக் கிரகமும் சுக்கிரன்தான். இதுவே அவர்களின் இயல்புக்குக் காரணமாக உள்ளது. 


சுக்கிரன் செல்வம் மற்றும் செழுமையின் சின்னமாக கருதப்படுகிறது.  இயல்பிலேயே இவர்கள் காதலில் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின் இயல்பினால் தான் அனைவரும் இவர்களது ரசிகர்களாக மாறுகிறார்கள்.


மிதுனம்


ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்கள் பண ஆசை உள்ளவர்கள். அவர்கள் பெருமையுடன் வாழ விரும்புகிறார்கள். இதுமட்டுமின்றி மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக கருதப்படுகிறார்கள். மேலும் இவற்றின் அடிப்படையில் இவர்கள் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். 


மிதுன ராசிக்காரர்கள் புதிய திட்டங்களில், புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள். அதுமட்டுமின்றி, கிரக தாக்கத்தால், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இவர்களுக்கு இருக்கும்.


ரிஷபம்


ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசிக்காரர்கள் பணம் செலவழிப்பதில் முன்னணியில் இருப்பார்கள். இந்த ராசிகளை ஆளும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விமான வசதிகளும் கிடைக்கும். இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். 


இந்த நபர்கள் பணம் சேர்ப்பதில் குறைவான நாட்டத்தையும், தங்கள் பொழுதுபோக்குகளை நிறைவேற்றிக் கொள்வதில் அதிக நாட்டத்தையும் கொண்டவர்கள். ஆனால் எப்போதும் அவர்களுக்கு பணத்துக்கு பஞ்சமிருக்காது. இவர்கள் தங்கள் வாழ்வில் அதிக பணம் ஈட்டுவார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் சிக்கல் யாருக்கு, சனியின் ஆட்டம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ