சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை 2023: வேத ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் மாறும் போது, ​​அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெளிவாகத் தெரியும். இந்த விளைவு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ இருக்கலாம். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 ஆம் தேதி இரவு நடக்கப் போகிறது. இந்த நாளில் சுக்கிரன் கடக ராசியில் இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.மேலும் பெயர்ச்சியானது சரியாக இரவு 7.39 மணிக்கு சந்திரனின் ராசியான கடக ராசியில் நிகழ உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, கலை, காதல், சுக போகம், செல்வம் ஆகியவற்றை அருளக்கூடியவர். அதே போல செவ்வாய் தைரியம், வீரம், ஆற்றல், தலைமை மற்றும் இரத்தம் போன்றவற்றிற்கான காரக கிரகமாகும். எனவே, இந்த இரண்டு கிரகங்களும் இணையும் போதெல்லாம், ஒவ்வொருவரின் பொது வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.


மேலும் படிக்க | அச்சச்சோ! செவ்வாய் சனியால் இந்த ராசிகளுக்கு விபரீதம், எச்சரிக்கை தேவை


ஜோதிட சாஸ்திரப்படி வருகிற மே 30 ஆம் தேதி கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாகி அடுத்த மாதம் ஜூலை 7 ஆம் தேதி வரை இதே ராசியில் நீடிப்பார். இதன் போது செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் பல ராசிக்காரர்களுக்கு பம்பர் லாட்டரி அடிக்கக்கூடும். எனவே இந்த நேரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வோம்.


மேஷ ராசி
ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை பம்பர் பலன்களைத் தரப்போகிறது. இந்த நேரத்தில், குடும்பத்தின் வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு வசதியாக பொருட்களையும் வாங்கலாம். அதே சமயம் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், நீங்கள் அதை திரும்பப் பெறலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு எந்த வித மன அழுத்தமும் இருக்காது. நிதி ஆதாயத்திற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.


மிதுன ராசி
ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை இந்த காலகட்டத்தில் பலப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். மறுபுறம், நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவிட்டால், இந்த நேரத்தில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். வருமான அதிகரிப்பு உங்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.


கடக ராசி
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. இதன் போது வாழ்க்கையில் பல சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதுமட்டுமின்றி காதல் வாழ்விலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். துணையுடன் நல்லுறவு உண்டாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் கடக ராசிக்காரர்களின் உறவு வலுவாக இருக்கும் மற்றும் எதிர்காலத்தில் கடக ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும்.


கன்னி ராசி
ஜோதிட சாஸ்திரப்படி, கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை மிகுந்த மங்களகரமாகவும், பலன் தருவதாகவும் இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக வளமானவராக இருப்பார். திருமணமாகாதவர்களின் தேடுதல் பணி விரைவில் நிறைவேறும். இதுமட்டுமின்றி சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதன் அஸ்தமனம் 2023, இந்த 4 ராசிகளுக்கு சிக்கல் ஏற்படும்; தொழிலில் நஷ்டம் ஏற்படும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ