திருப்பதி:  திருப்பதி திருமலைக்கு நாள்தோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோறும் சுமார் 30 லட்சம் பக்தர்கள் வெங்கடவனை தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் உட்பட பல்வேறு விதமான தரிசன வகைகள் உள்ளன. தினசரி திருமலை திருப்பதிக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிடிடி தேவஸ்தானம், பல்வேறு முன்முயற்சிகளை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், பக்தர்கள், திருப்பதிக்கு வந்து செல்வதற்குக் வசதியாக புதிய மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தரிசனம், தங்குமிட முன்பதிவு, நன்கொடைகள் போன்ற சேவைகளை ஒருங்கிணைக்கும் புதிய மொபைல் செயலியை TTD அறிமுகப்படுத்தியுள்ளது. திருமலை கோவிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல்வேறு அம்சங்களை ‘TTDevasthanams’ வழங்கும் என்று TTD தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 27, 2023) முறைப்படி ஒரு புதிய மொபைல் செயலியான TTDevasthanams ஐ அறிமுகப்படுத்திய திரு ஒய்.வி.சுப்பா ரெட்டி, பக்தர்கள் இந்த நவீன தொழில்நுட்ப மொபைல் செயலி மூலம் அனைத்து சேவைகளையும் அணுக முடியும் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு


 


TTDயின் IT பிரிவு மற்றும் Jio பிளாட்ஃபார்ம்கள் இணைந்து கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள சிறப்பு அப்ளிகேஷன், ஆர்ஜித சேவை, தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்களை எளிதாக முன்பதிவு செய்வதற்கும், SVBC தொலைகாட்சி சேனலில் நேரலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும், நன்கொடை அளிப்பதற்கும் ஏற்றவாறு உருவக்கப்பட்டுள்ளது.  



திருப்பதி கோவிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்கும் இந்த புதிய செயலியானது, பக்தர்களுக்கான டிஜிட்டல் நுழைவாயில் என்று தர்மா ரெட்டி கூறினார்.


பக்தர்களுக்கு கையேடாக செயல்படும், இந்த தனிப்பயனாக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு ஏற்ற செயலியை வெளியிட கடந்த இரண்டு ஆண்டுகளாக TTD ஜியோ குழுவுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாக TTD நிர்வாக அதிகாரி ஏ.வி. திருமலை தெரிவித்தார்.


 இந்த செயலியின் முக்கிய அம்சங்களை விளக்கிய ஜியோ குழு பிரதிநிதிகள், இந்த செயலியானது ரிங்டோன்கள், வீடியோக்கள் மற்றும் வால்பேப்பர்களுக்கு எளிதான அணுகலை வழங்கும் என்றும், அனைத்து வகையான சேவைகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | திருப்பதி தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


.