திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள்

Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 21, 2022, 08:16 AM IST
  • சுபீனா பானு மற்றும் அப்துல் கனி தம்பதிகளின் நன்கொடை
  • தொடர்ந்து கோயிலுக்கு நன்கொடை வழங்கும் இஸ்லாமிய தம்பதிகள்
  • மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இஸ்லாமியர்கள்
திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் title=

Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அப்துல் கனி மற்றும் சுபீனா பானு தம்பதிகள் இந்த அரிய மற்றும் பாராட்டத்தக்க நன்கொடையை அளித்துள்ளனர். இந்த தம்பதிகள், கோயிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் காலத்தின் போது, கோயில் வளாகத்தில் கிருமிநாசினிகளை தெளிக்க பல பரிமாண டிராக்டர் பொருத்தப்பட்ட தெளிப்பானை நன்கொடையாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்த இஸ்லாமிய தம்பதிகள் 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னையைச் சேர்ந்த சுபீனா பானு மற்றும் அப்துல் கானி தம்பதியினருக்கு பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிற்து.

சமூக ஊடகங்களிலும் பலரும் இந்த தம்பதிகளை பாராட்டி வருகின்றனர். அதிலும், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் படிக்க | திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான்

இந்த தம்பதிகள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அளித்துள்ள ஒரு கோடி ரூபாய் நன்கொடை எப்படி பயன்படுத்தப்படும் என்பது தெரியுமா? இந்த நன்கொடையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி ஓய்வு இல்லத்திற்கு தேவையான மரச்சாமான்கள் மற்றும் பாத்திரங்கள் வாங்குவதற்கு ரூ.87 லட்சம் பயன்படுத்தப்படும். அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கு செலவு செய்யப்படும்.

மேலும் படிக்க | அக்டோபர் 18 வரை சூரியனின் கோபப்பார்வையை எதிர்கொள்ளும் 5 ராசிகள்! எச்சரிக்கை அவசியம்

உலகின் பணக்கார கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரிகளிடம் சென்னை தம்பதிகள் தம்பதியினர் நன்கொடையை வழங்கினார்கள். குடும்பத்தின் நன்கொடையை TTD செயல் அலுவலர் AV தர்மா ரெட்டி இந்த  நன்கொடையை பெற்றுக் கொண்டார். மத நல்லிணக்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லும் தம்பதிகளின் பெருந்தன்மைக்கு தர்மா ரெட்டி நன்றி தெரிவித்தார்.

நன்கொடை கொடுக்கும் நிகழ்ச்சியில் திருப்பதி திருமலை தேவஸ்தான (TTD) வேத பண்டிதர்கள் வேதசிர்வசனம் செய்தனர், கோவில் அதிகாரிகள் அப்துல் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்கள்.

மேலும் படிக்க | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

மேலும் படிக்க |  TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News