Rahu Transit 2023: 3 ராசிகளின் நிம்மதியைக் கெடுக்க வரும் ராகு பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு எச்சரிக்கை
Rahu Transit 2023 Bad Effects And Remedies: ராகு, ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை பின்நோக்கி நகர்வார், அதிலும் அவர் சனியைப் பின்தொடரும் கிரகம் ஆகும். அதனால், ராகுவும், சனியைப் போன்ற பலன்களை உருவாக்குவார்
Rahu Mahadasha: ஜோதிடத்தின்படி ராகு அழிவுகரமான கிரகமாக அறியப்படுகிறது, ஆனால், அவரவர் ஜாதக அமைப்புக்கு ஏற்றாற் போல பலன்கள் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. ஜோதிட சாஸ்திரங்களின்ன்படி ராகு, ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை பின்நோக்கி நகர்வார், அதிலும் அவர் சனியைப் பின்தொடரும் கிரகம் ஆகும். அதனால், ராகுவும், சனியைப் போன்ற பலன்களை உருவாக்குவார்.
2023ஆம் ஆண்டில் அக்டோபர் 30 மதியம் 2:13 மணிக்கு, ராகு வக்ர கதியில் நகர்த்து தற்போது அமர்ந்திருக்கும் மேஷ ராசியிலிருந்து வெளியே வருவார். செவ்வாய் மற்றும் வியாழனால் ஆளப்படும் மீன ராசிக்குள் செல்வார்.
இந்த ராகுப் பெயர்ச்சியால் துன்பத்தை அனுபவிக்கப் போகும் சில ராசிகள், அதை அறிந்து தக்க பரிகாரங்களை செய்து வாழ்வில் நிம்மதியைப் பெறலாம்.
ரிஷபம்
ராகு பெயர்ச்சியால் வீண் செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரமாக செலவு செய்கிறோம் என்பதை உணராமலேயே செலவும் செய்வீர்கள். அதோடு, மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் சில செயல்களையும் உங்களை ராகு செய்ய வைக்கலாம். சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், ஆரோக்கிய குறைபாடு மற்றும் உடல் பலவீனம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்படும் நிலையில் ராகு, ரிஷப ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களைத் தருவார்.
நீண்ட காலமாக மனதில் இருந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் காலமாக இருக்கலாம். எனவே கவனமாக செலவு செய்யுங்கள், இல்லாவிட்டால் பணம் மட்டுமல்ல, மனக்கஷ்டத்திற்கும் ஆளாக நேரலாம்.
பரிகாரம்: ராகு கிரகத்தின் ஆசி பெற, ராகுவுக்கு உரிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ராகு காலத்தில் துர்க்கைக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆனால் உங்கள் விடாமுயற்சியின் அடிப்படையில் நீங்கள் ஒரு வலுவான நிலையை உருவாக்க முடியும் மற்றும் உங்கள் பணிக்கான பாராட்டுகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எப்போதுமே இருக்கும். தொழிலில் அதிக கவனம் செலுத்துவதால், குடும்பத்தினரின் அதிருப்தி அதிகமாகும்.
இல்லற வாழ்க்கையில் சிரமங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும், ஒட்டுமொத்தமாக பார்த்தால், கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
பரிகாரம்: புதன்கிழமை அன்று கோமாதாவிற்கு பசுந்தீவனம் மற்றும் முழு பச்சைப் பயறு கொடுக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மற்றும் வணிகத்தில் பிரச்சனை ஏற்படலாம். தொழில் மற்றும் பணியிடத்தில் எதிர்பாராத வகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். பதட்டத்தில் அதிகம் யோசிக்காமல் எடுக்கும் முடிவால் பிரச்சனைகள் முளைக்கும். திடீரென எடுக்கும் முடிவுகள் வருத்தத்தைக் கொடுக்கும்.
வணிக கூட்டாளருடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இது வாழ்க்கைத்துணை மற்றும் காதல் துணைக்கும் பொருந்தும். உறவுகளிடையே விரிசல் ஏற்படும் காலமாக இந்த ராகுவின் பெயர்ச்சி இருக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம்
பரிகாரம்: ராகு கிரகத்தின் ஆசி பெற, சிவனை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அவரை சராணகதியடைய வேண்டும். ராகு காலத்தில் துர்க்கைக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும்
மேலும் படிக்க | மகா சிவராத்திரி ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ