Rahu Bad Effects: சூரியனையே விழுங்கும் ராகுவால் ஏற்படும் துன்பங்கள்! பரிகாரங்கள் பலன் தரும்

Astro Remedies For Rahu Mahadasha: ராகு மகாதிசை நடக்கும்போது பொதுவாக தீய பலன்களே அதிகம் ஏற்படும் என்று சொன்னாலும், அவரவர் ஜாதக அமைப்புக்கு ஏற்றாற் போல பலன்கள் இருக்கும ராகுவுக்கு பரிகாரங்கள் செய்து பலன் பெறலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2023, 12:07 PM IST
  • ராகு மகாதிசை மொத்தம் 18 ஆண்டுகள்
  • ராகுவின் மகாதிசையில் புதன் சுக்கிரன் சனி அந்தர்காலங்கள்
  • ராகுவுக்கு பரிகாரங்கள் செய்வது எப்படி?
Rahu Bad Effects: சூரியனையே விழுங்கும் ராகுவால் ஏற்படும் துன்பங்கள்! பரிகாரங்கள் பலன் தரும் title=

Rahu Mahadasha: ஜோதிடத்தின்படி ராகு அழிவுகரமான கிரகமாக அறியப்படுகிறது, இது ஒருவரின் வாழ்க்கையில் பல மோசமான விளைவுகளைக் கொண்டுவருகிறது. ராகு மகாதிசை நடக்கும்போது பொதுவாக தீய பலன்களே அதிகம் ஏற்படும் என்று சொன்னாலும், அவரவர் ஜாதக அமைப்புக்கு ஏற்றாற் போல பலன்கள் இருக்கும். 

ராகு மகாதிசையில், திடீர் பணவரவு, எதிர்பாராத அதிர்ஷ்டம் என திடீர் நன்மைகளை அள்ளி வழங்குவார் ராகு. ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும். அப்போது, ஒருவரின் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாறுவார். குப்பை மேட்டில் இருப்பவரைக் கூட கோபுரத்தில் அமரவைப்பார். அந்த அளவிற்கு ராகு கொட்டிக்கொடுப்பார்.

ராகு மகாதசையின் சில மோசமான பலன்களைப் பார்ப்போம். ராகு நிழல் கிரகமாக இருந்தாலும். ராகுவின் பார்வை படும் வீடுகளில் எல்லாம், பலத்த பாதிப்பு இருக்கும். பொதுவாக ராகுவின் மகாதிசை நடைபெறும் காலத்தில், உடல் பலவீனம், ஆஸ்துமா, சிறுநீர் கோளாறுகள், இருமல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் படிக்க | மஹாசிவராத்திரியில் அற்புத யோகம்! ஏழரை சனி பாதிப்பிலிருந்து விடுபட செய்ய வேண்டியவை!

இது உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால், மனதிற்கு வருத்தம் தரும் மனரீதியான சிக்கல்களாலும் ராகு ஒருவரை பாதிப்பார். குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள், முன்னேற்றப் பாதையில் தடைகளை ஏற்படுத்தவும் செய்வார் ராகு. உறவுகள் மற்றும் நண்பர்கள்,  குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரியும் அளவுக்கும் ராகுவின் மகாதிசை தாக்கம் இருக்கும்.

ராகுவின் தாக்கத்தை எப்படி தவிர்ப்பது? 
ராகு மகாதிசையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பரிகாரங்களை: ராகுவின் மகாதசை 18 ஆண்டுகள் நீடிக்கும். இது தவிர, வேறு சில கிரகங்களின் தாக்கமும் மோசமாக இருக்கும்போது, ராகுவின் மகாதசையும் நடந்து கொண்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

ராகுவும் சனியும்

ராகு மகாதிசையில் சனியின் அந்தர்திசை காலம் 2 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 6 நாட்கள். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகமாகும். கணவன் மனைவிக்கு இடையே மோதல் அதிகரித்து விவாகரத்து வரை செல்லும் என்பதால் கவனமாக இந்த காலத்தில் செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற 'அபிஷேகங்கள்'!

இப்படி, ராகு மகாதசையில், புதன், கேது, சுக்கிரன், செவ்வாய் என வேறு கிரகங்களின் காலகட்டதில் ஏற்படும் தீய விளைவுகளையும் போக்க துர்க்கை வழிபாடு மிகவும் சிறந்தது.  

ராகு நிழல் கிரகமாக இருந்தாலும். சூரியனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது. அதே போல சந்திரனின் ஒளியை மறைக்கும் சக்தியையும் கொண்ட ராகுவின் மோசமான பலன்களில் இருந்து விடுபட, வாயுவின் தலமான காளாஹஸ்தி சென்று வழிபடுவது நல்லது.

ராகு மகாதிசை பரிகாரங்கள்

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருகாளத்தி என்று அழைக்கப்படும் காளஹஸ்தியில் வீற்றிருக்கும் காளத்தி நாதன் என்ற பெயர் கொண்ட சிவபெருமானை சென்று தரிசித்து, ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் தோஷங்கள் விலகும்.

அதேபோல, தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்வதும் நல்லது. ராகு காலங்களில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தும் ராகுவின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News