ஜோதிடத்தின் படி, கிரகம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும்.தைரியத்தையும் தன்னம்ப்பிக்கையையும் தரக்கூடிய செவ்வாய், புதனின் ராசியில்  மார்ச் 13 ஆம் தேதி நுழையப் போகிறார். அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். ஆனால் இது குறிப்பாக 3 ராசிகளில் ஆக்கபபூர்வமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாத செவ்வாய் சஞ்சாரம்


அதிலும் இந்த 3 ராசிகளைச் சேர்ந்த பெண்களுக்கு மார்ச் மாத செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆக்கபபூர்வமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கப்போகும் செவ்வாய்ப் பெயர்ச்சிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் சரி.


புதனின் ராசிக்கு பெயரும் செவ்வாய்


புதனின் வீட்டிற்கு விருந்தினராய் போகும் செவ்வாய் பகவானை வணங்கும் இந்த ராசியினருக்கு இனி கொண்டாட்டம் தான். வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் வறுமை விலகும், செல்வம் பெருகும்


கன்னி ராசி


இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வேலையில்லாதவர்கள் இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். மறுபுறம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றியைப் பெறலாம்.


இக்காலகட்டத்தில் தந்தை வழி, தந்தை, தந்தை போன்றவர்களின் ஒத்துழைப்பும் நன்மைகளும் கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு ஆசைப்பட்ட விஷயங்கள் கிடைக்கும்


துலாம்


செவ்வாயின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். செவ்வாய் உங்கள் ராசியிலிருந்து அதிர்ஷ்ட ஸ்தானத்திற்கு மாறப் போகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் விருப்பம் நிறைவேறும்.


தடைபட்ட காரியங்கள் கைகூடும். பணியிடத்தில் அதிகாரிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பும், இணக்கமும் இருக்கும். வழக்கு, சச்சரவுகள் சுமூகமாக தீரும். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை அல்லது சொத்து வாங்கும் யோகத்தை செவ்வாய் பகவான் அருள்வார்.


மேலும் படிக்க | கிரக சேர்க்கையால் உருவான 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியும் சாதகமாக இருக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சியால் பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


முன்பு செய்த முதலீடு இப்போது பலன் தரும். உங்கள் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இது தவிர கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். பெண்களுக்கு செல்வம் வந்து சேரும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | VENUS TRANSIT: தங்கத் தட்டில் வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ