கிரக சேர்க்கையால் உருவான 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்

Effect of Rajayogam: நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சஷ, மாளவ்யா மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்கள் உருவாகின்றன. நான்கு ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் உருவாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2023, 05:00 PM IST
  • சுக்கிரன் கிரகம் தனுசு ராசியின் நான்காம் வீட்டில் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது.
  • இது தொழில் மற்றும் வேலையில் சாதகமான பலன்களைத் தரும்.
  • புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கிரக சேர்க்கையால் உருவான 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகள் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும் title=

கிரக மாற்றத்தால் உருவாகும் ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றுகின்றன. அவற்றின் தாக்கம் நாடு, உலகம் மற்றும் மனித இனத்தின் மீது இருக்கிறது. இந்த தாக்கம் காரணமாக சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். இப்படிப்பட்ட மாற்றங்களின் போது, சில நேரங்களில் அரிதான ராஜயோகமும் உருவாகிறது. வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரனும் குருவும் தற்போது மீனத்தில் உள்ளனர். சனி பகவான் சூரியனுடன் கும்ப ராசியில் இருக்கிறார். இந்த நான்கு பெரிய கிரகங்களின் அரிய சேர்க்கை 617 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ளது. 

இந்த கிரகங்களின் சேர்க்கையால் சஷ, மாளவ்யா மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த மூன்று ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், நான்கு ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் உருவாகும். இவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றமும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.

அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்

மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் இணைவதால் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம் உருவாகின்ற்னா. மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் சாதகமாக அமையும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு புதிய வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். இதனால் நல்ல லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பஞ்ச மஹா யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

கும்பம்

சனி பகவான் கும்ப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஷஷ் என்ற ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இது சுப பலன்களைத் தரும். பொருளாதார நிலை மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் இப்போது தொடங்கும், அதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும்.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உருவாகும். குழந்தைகளால் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். 

தனுசு

சுக்கிரன் கிரகம் தனுசு ராசியின் நான்காம் வீட்டில் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இது தொழில் மற்றும் வேலையில் சாதகமான பலன்களைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். தற்போது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொருளாதார நிலை மேம்படும். வீட்டில் வசதிகள் கூடும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் தற்போது உள்ளது. ஆகையால், இவற்றை வாங்கும் எண்ணம் இருந்தால், இப்போது வாங்கலாம். 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இது மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கி பொருளாதார நிலை வலுப்பெறும். தொழிலதிபர்கள் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் பழைய முதலீடுகளின் மூலம் பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மார்ச் 15ம் தேதிக்குள் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News