வாஸ்து சாஸ்திரத்தில், வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. சில பொருட்கள் வீட்டில் இருப்பதும், சில கெட்ட பழக்கங்களை கடைப்பிடிப்பதும், வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்த்து, வீட்டில் நிம்மதி கெடும். அதோடு தரித்திரமும் வந்து சேரும். நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்களால், செல்வத்தை அள்ளித்தரும் அன்னை மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாவோம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமையலறையில் கிடக்கும் எச்சில் பாத்திரங்கள்


சாப்பிட்டவுடன் எச்சில் பாத்திரங்களை உடனே சுத்தம் செய்து விட வேண்டும், அதை சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டு வைப்பது வீட்டிற்கு நல்லதல்ல. நம்மில் பலருக்கு இரவு சாப்பாடு முடிந்ததும், அதை அப்படியே, சமையலறையில் உள்ள சிங்கிள் போட்டுவிட்டு, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்போம். ஆனால் சமையலறையில், எச்சில் பாத்திரங்கள் சுத்தப்படுத்தப்படாமல் இருப்பது, ராகு கேது தோஷங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம் (Vastu Tips).


படுக்கையில் அழுக்கு மற்றும் கிழிந்த போர்வைகள் இருத்தல்


படுக்கை அறையில் உள்ள போர்வைகள் தலையணைகள், படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதோடு, கிழிந்த போர்வைகளும் இருக்கக் கூடாது. அவற்றை வாரம் ஒரு முறை சுத்தம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். அழுக்கான போர்வைகள் படுக்கை விரிப்புகள், வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.


மேலும் படிக்க | Vastu Tips: கடிகாரத்தை 'இந்த' திசையில் வைக்காதீங்க... வீட்டில் தரித்திரம் ஏற்படும்!


பூஜை அறையை அழுக்காக வைத்திருப்பது


பூஜை அறை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். வாடிய பூக்கள், ஊதுபத்தி எரிந்த சாம்பல்கள் ஆகியவை உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட வேண்டும். பூஜை அறையில் இருக்கும் தீபங்களும், இதர பூஜை பொருட்களும், வாரத்துக்கு ஒரு முறையாவது நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும். எண்ணெய் பிசுக்கு பிடித்த விளக்குகளில் தீபம் ஏற்றுவது வீட்டிற்கு நல்லதல்ல.


காலணிகளை முறையில்லாமல் வைத்தல்


வீட்டிற்கு வெளியில் சென்று திரும்பி வந்தவுடன், காலணிகளை ஆங்காங்கே வீசும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். இது எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும். வீட்டின் பிரதான வாயிலில் காலணிகளை வைக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் மகாலட்சுமியை இது தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. காலனிகளை வைக்க தனியாக ஒரு அலமாரியை பயன்படுத்துவது நல்லது.


சாப்பிட்ட பின் தட்டில் கை கழுவும் பழக்கம்


நம்மில் பலருக்கு சாப்பிட்டவுடன் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் இருக்கும். ஆனால் இதை செய்வதன் மூலம், வீட்டிற்கு எதிர்மறை ஆற்றல் வந்து சேரும் என்று எச்சரிக்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். சாப்பிட்ட உடன், கை கழுவும் இடத்திற்கு சென்று கையை கழுவி, சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை சுத்தம் செய்து வைப்பது தான் சரியான முறை. இதனால் வீட்டில் பண பற்றாக்குறை ஏற்படுவதோடு, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


மாலை நேரத்தில் தூங்கும் பழக்கம்


மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் தூங்குவதால், எதிர்மறை ஆற்றல் வந்து சேரும். வீட்டில் தரித்திரம் ஏற்படும் என்பதோடு, உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ