ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் ஆடம்பரம், வசதிகள் மற்றும் செழுமைக்கான காரணியாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால் உலக இன்பங்கள் அனைத்தும் கைகூடும். சுக்கிரன் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ இருந்தால், அந்த நபர் மகிழ்ச்சியை இழக்கிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின் படி, இன்று மார்ச் 12 அன்று, சுக்கிரன் கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது. மேஷத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் முக்கியமானது. ஏனெனில் இது அனைத்து ராசிகளின் பொருளாதார நிலை, மகிழ்ச்சி மற்றும் காத வாழ்க்கை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சுக்கிரனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும்.


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சுபமான பலன்களைத் தரும், ஏனென்றால் சுக்கிரன் தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் நுழைகிறார். சுக்கிரனின் சஞ்சாரம் இவர்களின் ஆளுமையின் கவர்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணையுடன் அன்பு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆளுமையில் மாற்றம் ஏற்படலாம். காதல் உறவுகளும் மேம்படும். திருமணமானவர்களுக்கு துணைவரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் காணலாம்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். திடீரென்று பணப் பலன்களைப் பெறலாம். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு - வாகனம் அல்லது விலை உயர்ந்த நகைகள், ஆடைகள் வாங்கலாம். புதிய வேலையைத் தொடங்குபவர்களுக்கு இது நல்ல நேரம்.


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். திருமணமானவர்களுக்குப் சுக்கிரன் பெயர்ச்சி பலன்களைத் தரும். 


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமான பங்குதாரர்களுக்கு, இந்த நேரம் மிகவும் அன்பை மேம்படுத்தும். எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். தொழிலில் வெற்றி உண்டாகும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். பண விஷயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை


மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலுக்கு நல்ல நேரம். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும் வேலையில் பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ