புத்தாண்டின் அதிர்ஷ்ட ராசிகள்: 2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த புத்தாண்டிலும் கிரகங்கள் மற்றும் ராசிகளின் மாற்றம் இருக்கும். இந்த மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஜோதிடத்தின் பார்வையில், புத்தாண்டு அதாவது 2023 ஆம் ஆண்டில் எந்த ராசிகளுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டம் இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். இவர்கள் பல விதமான பலன்களைப் பெறுவார்கள், பலவிதமான பிரச்சனைகள் தீரும். கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை காரணமாக 4 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு செல்வம் பெருகும். 2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுனம்


2023 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வருடத்தின் முதல் மாதத்திலிருந்து நல்ல காலம் தொடங்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். பதவி கௌரவம் உயரும். மரியாதை அதிகரிக்கும். அன்பின் தேடல் நிறைவடையும்.


சிம்மம்


ஜனவரி 17, 2023 அன்று, சனி தனது ராசியை மாற்றியவுடன் சிம்ம ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் தொடங்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக பலன் கிடைக்க வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் வெற்றி கிடைக்கும். நிறுத்தப்பட்ட பணிகள் வேகமாக நடக்கும்.


மேலும் படிக்க | புதன் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு சூப்பர், சிலருக்கு சுமார், ராசிபலன் இதோ 


துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு சிறப்பாக அமையும். வாழ்க்கையில் இனிமையான மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சுகபோகங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த புத்தாண்டு முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும். பணத்தை நன்றாக நிர்வகிக்க முடியும். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மார்கழி 2022: பிறந்தது மார்கழி மாதம், கோவில்களில் சிறப்பு வழிபாடு


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ