Wall Clock Vastu Tips in Tamil:கடிகாரம் இல்லாத வீட்டை பார்க்க முடியாது. வீடு மட்டும் அல்ல அலுவலகம், கடை என எல்லா இடத்திலும் நிச்சயம் கடிகாரம் இருக்கும். சாதாரண கடிகாரங்கள் முதல், விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட கடிகாரங்கள் என வகை வகையான கடிகாரங்கள், நேரத்தை காட்டும் பொருள் மட்டுமல்ல ஆடம்பர பொருளாகவும் உள்ளது என்றால் மிகை இல்லை. இந்நிலையில் வீட்டிலும் சரி, வேறு எந்த இடம் ஆனாலும் சரி, வாஸ்து சாஸ்திரப்படி, சரியான திசையில், சரியான இடத்தில், சரியான விதத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்தால், வீட்டில் நிம்மதியும் செல்வ செழிப்பும் நிறைந்திருக்கும். இல்லையென்றால், நேர்மறை சக்திகள் காரணமாக, வீட்டில் நிம்மதி இல்லாத சூழலும், பண பற்றாக்குறையும் ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடிகாரம் தொடர்பான வாஸ்து சாஸ்திரம்


வாஸ்து சாஸ்திரத்தில், வாழ்க்கையில் மகிழ்ச்சி அமைதி, செல்வ வளம் ஆகியவை நிறைந்து இருக்க, கடிகாரத்தை சுவரில் எந்த திசையில் வைக்க வேண்டும், கடிகாரம் தொடர்பான எந்த விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வாஸ்து தொடர்பான தவறுகள் (Vastu Tips) காரணமாக வீட்டில் துரதிஷ்டமும், தரித்திரமும் ஏற்படலாம்.


கடிகாரத்தை வைக்க வேண்டிய திசை


கடிகாரத்தை வீட்டின் தென் பகுதியில் வைக்கக் கூடாது. அதாவது தென்திசையில் இருக்கும் சுவரில் கடிகாரத்தை மாட்டக்கூடாது. அதே சமயத்தில் குபேரருக்கு உகந்த திசையாக கருதப்படும் வடக்கில் வைப்பது, வீட்டில் என்றென்றும் செல்வ வளம் நிறைந்திருக்க உதவும். வடக்கு திசையில் கடிகாரத்தை மாட்ட வசதி இல்லை என்றால், கிழக்கு திசையில் உள்ள சுவரில் மாட்டலாம்.


கடிகாரத்தை வைக்க வேண்டிய சரியான இடம்


பெரும்பாலான வீடுகளில் வீட்டின் கதவுகளுக்கு மேலே கடிகாரம் மாட்டியிருப்பதை பார்த்திருப்போம். அது நல்லதல்ல என்கிறது வாஸ்து சாஸ்திரம். கதவுகளுக்கு மேல் உள்ள சுவற்றில் கடிகாரத்தை பொருத்துவதால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள்


கடிகார நேரம் தொடர்பான வாஸ்து சாஸ்திரம்


நம்மில் பலருக்கு கடிகாரத்தில் காட்டும் நேரத்தை, நமது வசதிக்காக, சில நிமிடங்கள் பின்னோக்கி வைத்திருப்போம். அதாவது உண்மையான நேரம் ஏழரை மணி என்று இருந்தால், அந்த நேரத்தில் கடிகாரம் ஏழு நாற்பது என்றோ, 7:45 என்றோ காட்டுமாறு வைத்திருப்போம். ஆனால் கடிகாரத்தை சரியான நேரத்தில் அமைப்பதே வீட்டிற்கு முன்னேற்றத்தை கொடுக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கருதுகின்றனர்.


பெண்டுலம் உள்ள கடிகாரம்


பெண்டுலம் கொண்ட கடிகாரம், வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். அதே போல் ஏதேனும் இசையை இசைக்கும் கடிகாரமும், வீட்டிற்கு நல்லது. பெண்டுலத்தின் ஒளியும், கடிகாரத்தில் இருந்து வரும் மெல்லிசையும், மனதிற்கு இதத்தை தருவதோடு, வீட்டில் நல்ல சூழல் ஏற்பட உதவும்.


பழுதான கடிகாரங்கள்


கடிகாரம் பழுதடைந்து இருந்தாலோ, உடைந்து இருந்தாலும் அதை வீட்டில் வைக்கவே கூடாது. ஓடாத கடிகாரங்கள், வீட்டில் பணப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். ஓடாத கடிகாரத்தை போல் வாழ்க்கையும் ஸ்தம்பித்து நின்று போகலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. கடிகாரங்கள் பழுதடைந்தால் உடனே சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியவில்லை என்றால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். பேட்டரியினால் இயங்குும் கடிகாரம், நின்று விட்டால் உடனடியாக பேட்டரியை மாற்றி சரி செய்ய வேண்டும். அதேபோன்று கடிகாரத்தின் மீது தூசி ஏதும் இல்லாமல் நன்றாக பராமரிக்க வேண்டும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்... மே 1 முதல் பணக்கார யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ