வரும் வாரத்தின் தொடக்கத்தில், அதாவது மே 27ஆம் தேதி, சந்திரன் தனுசு ராசியிலும், வாரம் முழுவதும் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளிலும் சஞ்சரித்து ஜூன் 2ஆம் தேதி மீன ராசியை அடைவார். சந்திரன் மகர ராசிக்கு வந்தவுடன் குருவின் பார்வையால் கஜகேசரி யோகம் உண்டாகும். எதிர்வரும் ஒரு வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிக்கும் காலம் இது. புதிய நபர்களின் அறிமுகங்களும், ஒத்துழைப்பும் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும், இது உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது.


ரிஷபம் 
நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. இந்த வாரத்தில் யாருடனும் வாதங்களை முன்னெடுக்க வேண்டாம். பேச்சைத் தவிர்ப்பதும் அனுசரித்துச் செல்வதும் நல்லது. பணிகளில் கால தாமதம் உண்டாகும்.  எதிர்பாராத சில பொறுப்புகளால் மனதில் மாற்றம் ஏற்படும்.  


மிதுனம் 
பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் கொடுக்கவும் வேண்டாம், வாங்கவும் வேண்டாம். வியாபாரம் தொடர்பான வேலைகளில் கவனமாக செயல்படவும்.  


மேலும் படிக்க | உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


கடகம் 
உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள்.  


சிம்மம் 
வெளி வட்டாரத்தில் உங்கள் பெயர் பிரபலமாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கு புதிய துறை சார்ந்த தேடல் அவசியம். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  


கன்னி 
புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் கவலையைக் கொடுக்கும், பண விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில்  எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வேலை செய்வதில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.


துலாம்
நட்பு வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும் குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல் உண்டாகும். ஆர்வத்துடன் செயல்பட்டால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.  


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... தப்பிக்க சில பரிகாரங்கள்


விருச்சிகம் 
குடும்பத்தில் அனுசரித்துச் சென்றால் மனதில் நிம்மதி நிலைக்கும். இறைப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாக்கு சாதுரியம் அவசியம். கடுமையான உழைப்பும் நேர்மையும் ஆதாயம் கொடுக்கும்.  நெருக்கடியான சூழல் மாறும், கவலைகள் மறையும். 


தனுசு 
வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய உகந்த வாரம் இது. சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அவசியம் என்பதை உணரும் நேரம் இது. புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணும் காலம் இது. தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். 


மகரம் 
 அலுவல் பணிகளில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வெளியூர் பயணங்களால் பலன்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். விலகிச் சென்றவர்கள் நெருங்கிவந்தாலும், கவனமாக கையாளவும். சுப காரிய பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். 


கும்பம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும் வாரம் இது. உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும், மனதில் அமைதி ஏற்படும்.


மீனம்  
தாயின் விருப்பங்களை நிறைவேற்றும் வாரம் இது. மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மனதில் செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். 


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | டெல்லி தேர்தலில் சிம்மாசனம் யாருக்கு? வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள ராசி எது? ராசிபலன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ