டெல்லி தேர்தலில் சிம்மாசனம் யாருக்கு? வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள ராசி எது? ராசிபலன்!

டெல்லியில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. பலரின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் நாளான இன்று, வாக்கு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் மக்கள், ஜனநாயகக் கடமை ஆற்றப்போகின்றனர். இந்த நாள் எந்த ராசிக்கு சாதகமாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...  

மே 25, 2024க்கான ராசிபலன்.... 12 ராசிகளுக்கான இன்றைய நாளுக்கான ஜோதிடக் கணிப்பை தெரிந்துக் கொள்வோம்

1 /14

குரோதி ஆண்டு, வைகாசி 12ம் நாள், கேட்டை நட்சத்திர நாளான இன்று இந்தியாவில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. யாருக்கு சாதகம்? யார் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன்...  

2 /14

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும், இது புதிய வேலை சார்ந்த எண்ணங்களை ஏற்படுத்தும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன்களை வசூலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் கைகூடும் 

3 /14

கவலைகள் விலகும் நேரம் இது. மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் இருந்து வந்த கசப்புணர்ச்சி குறையும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்களை சந்திக்க நேரிடும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

4 /14

சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும், கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும், லாபம் குறையும் 

5 /14

குடும்ப விஷயங்களில் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்ளாவிட்டால் திடீர் விரயங்கள் ஏற்படும்

6 /14

சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய நாள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும், குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் உதவியும் அவர்களின் ஆலோசனைகளால் தெளிவும் ஏற்படும். வியாபார போட்டிகளை வெற்றி கொண்டால் நிம்மதியுடன் இருக்கலாம். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும்.  

7 /14

விவேகத்துடன் செயல்பட்டால் நல்லது என்பதை மறந்துவிட வேண்டாம். தேவையற்ற குழப்பங்களால்  அலைச்சல் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு ஊக்கம் தரும். திடீர் செலவுகளால் மனதில் கவலை அதிகரிக்கும், கையிருப்பு குறையும்

8 /14

புதிய சிந்தனைகள் தோன்றும், அவை நன்மையாக முடியும். குழந்தைகளின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்களில் மனம் வருத்தப்படும் சூழல் உருவாகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பணியாளர்களிடத்தில் வீண் விவாதங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது

9 /14

சமூகத்தில் மதிப்பு மேம்படும் என்றால், அதற்கேற்ப கடமைகளும் அதிகரிக்கும். பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். நம்பிக்கையானவர்கள் யார் என்பது புரியும், கடன் விஷயங்களில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்க வேண்டுமானால், கவனமாக செயல்படுவது நல்லது

10 /14

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரத்தில் பொறுமையுடன் செய்லபடவும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். மனதில் இருந்துவந்த எண்ணங்கள் ஈடேறும். பிறருடைய எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களின் உதவியால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்

11 /14

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர வழியில்  காரியங்கள் சுமூகமாக முடியும்

12 /14

பயணங்களின் மூலம் அனுகூலம் பிறக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் சுலபமாக தீரும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். லாபம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்

13 /14

விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்கள் மனதில் தோன்றுவதால், சிந்தனைகளில் குழப்பம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மையால் கணவன், மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும்.  

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது