நாக சாதுக்களின் வாழ்க்கைமுறை மிகவும் கடினமானது. நாகா சாதுவாக மாறுவது மிகவும் கடினம், அப்படி நாக சாதுவான பிறகு, அவர்களின் வாழ்க்கை எளிதாக வாழ்ந்து விடக்கூடியது அல்ல. நாகா சாதுக்கள் நிர்வாணமாக இருப்பதால் அவர்களைப் பார்த்தால் அச்சப்படும் சாமானிய மக்கள், அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்ள விரும்புகின்றனர். இதற்கு காரணம் அகோரிகள் சிவபெருமானின் ஐந்தாவது அவதாரமாகக் கருதப்படுவதாகவும் இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடை என்பது ஆடம்பரத்தின் அடையாளமாக கருதப்படுவதால், உடலை மறைக்க ஆடைகளுக்கு பதிலாக சாம்பலையே நாகா சாதுக்கள் அணிந்துக் கொள்கின்றனர். நாக சாதுக்களின் வாழ்க்கை முறை, சாதாரண மக்களின் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்களுக்கு பல கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. ஏதேனும் விதிமீற்ல் செய்துவிட்டால், தண்டனையும் கடுமையானதாக இருக்கும்.


சிவனடியார்களான நாகா சாதுக்கள், இமயமலை போன்ற இடங்களில் தொலைதூர இடங்களில் வாழ்வதால் கடுங்குளிரிலும் அவர்கள் ஆடை அணியக்கூடாது. வெயில் குளிர் போன்ற இயற்கையின் கடுமையை சமாளிக்க கடுமையான யோகங்களை செய்ய வேண்டும்.


நாகா சாதுவாக வாழ்வது மட்டுமல்ல, நாகா சாதுவாக மாறுவதற்கு சவாலான பயிற்சிகளும் கட்டுப்பாடான கடுமையான பழக்கவழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். கடும் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்கும் இந்த சாதுக்களுக்கு மக்கள் மத்தியில் பயம் கலந்த மரியாதை உண்டு.  


நாக சாதுக்கள் - அகாரா  


ஆதி சங்கராச்சாரியார் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அகாராக்களை நிறுவினார். ஆன்மிக அமைப்புகள் அகாராக்கள் என்றும், பேடா என்று அழைக்கப்பட்டன, அகாராக்களில் பல சாதுக்கள் மற்றும் துறவிகள் உள்ளனர். இருந்தாலும், நாக சாதுக்களைப் பற்றி அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.


மேலும் படிக்க | ஆடியில் அடல்வல்லான் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! திருக்கோலங்களை தரிசித்தால் முக்தி!


நாக சாதுக்கள் கடுமையான சட்டம்


ஒரு ஆணோ பெண்ணோ நாக சாதுவாக மாறும்போது, ​​சில சட்டங்களுக்குக் கீழ்படிவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்த சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். சில தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது, அவர்கள் தங்கள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.


நாகா சாதுக்கள் செய்யக்கூடாத தவறுகள்


அகாராவின் இரண்டு உறுப்பினர்கள் தங்களுக்குள் சண்டையிடக்கூடாது. கோபத்தை தவிர்க்க வேண்டிய சாதுக்கள், சண்டையிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் இந்த நிபந்தனை உள்ளது. அதேபோல, நாகா சாது திருமணம் செய்து கொண்டாலோ, கற்பழிப்பு குற்றம் செய்தாலோ தண்டிக்கப்படுவார்.


திருடினாலோ அல்லது கோவிலை அசுத்தம் செய்தாலோ தண்டிக்கப்படுவார். இது தவிர, நாக சாதுக்கள் தடைசெய்யப்பட்ட இடத்திற்குள் நுழைந்தாலும் தண்டிக்கப்படுவார்கள், அதேபோல, தங்கள் தலைமையிடம் தவறாக நடந்து கொண்டாலும் தண்டனை உண்டு.  


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!


நாகா சாதுக்களுக்கு தண்டனை என்ன?


தவறு சிறியதாக இருந்தால், தண்டனை வழங்கப்படும். அகாராவின் காவலாளியுடன் சென்று கங்கையில் 5 முதல் 108 முறை நீராட வேண்டும். குறிப்பிட்ட முறை தலை முழுகி குளித்த பிறகு, கோவிலுக்கு வந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.


திருமணம் செய்தால் குழுவில் இருந்து விலக்கப்படுவார்


கஷ்டப்பட்டு நாகா சாதுவாக மாறிய பிறகு, கொலை அல்லது பலாத்காரம் போன்ற தவறுகள் செய்தால், தங்கள் அகாராவிலிருந்து அதாவது கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். நாகா சாதுவாக இருந்து தவறு செய்தவர் தங்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சாதாரண மனிதராகிவிடுவார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டத்தின்படி அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | தெய்வங்களை வழிபடும் ஆடி மாதம்! ஆடியில் திருவிழா கோலம் பூணும் கிராம காவல் தேவதைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ