தெய்வங்களை வழிபடும் ஆடி மாதம்! ஆடியில் திருவிழா கோலம் பூணும் கிராம காவல் தேவதைகள்!

Worship Of Kaaval Deivangal : பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வங்கள், காவல் தெய்வங்களை வழிபடும் ஆடி மாத ஆன்மீகம்... ஆடியில் பிரபலமான காவல் தெய்வங்கள் வழிபாடு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2024, 02:32 PM IST
  • க்தர்களின் குறை தீர்க்கும் தெய்வங்கள்
  • காவல் தெய்வங்களை வழிபடும் ஆடி மாதம்
  • ஆடியில் பிரபலமான காவல் தேவதை வழிபாடு...
தெய்வங்களை வழிபடும் ஆடி மாதம்! ஆடியில் திருவிழா கோலம் பூணும் கிராம காவல் தேவதைகள்! title=

ஆடி மாதம் தெய்வங்கள் உறங்கும் காலமான சதுர்மாஸ்யத்தின் தொடக்க மாதம் என்றும், இந்த 4 மாதங்களும் கடவுள்கள் உறக்கத்தில் இருப்பதால், சிவன் மற்றும் பார்வதி தேவி தான் தற்போது பக்தர்களின் குறையும் தீர்க்கும் தெய்வங்கள். சிவனையும், அம்பிகையையும் வழிபடும் இந்த ஆடி மாதத்தில் காவல் தெய்வங்கள் வழிபாடு மிகவும் பிரபலமானது.

காவல் தெய்வங்களில், கருப்பண்ண சாமி, சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, மாடன், வீரன் என பல ஆண் தெய்வங்களும் மாரியம்மன், முத்துமாரி அம்மன், ராக்காட்சி அம்மன், திரெளபதி அம்மன் என பல பெண் காவல் தெய்வங்களுக்கும் ஆடி மாதத்தில் படையல், வழிபாடு சிறப்பாக நடத்தப்படும்.

இதில் கருப்பண்ண சாமி மற்றும் மாரியம்மன் வழிபாட்டைப் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.

காவல் தெய்வம் கருப்பண்ண சாமி 

எல்லா ஊர்களிலும் காவல் தெய்வமாகத் இருப்பவர் கருப்பசாமி. சரி, கருப்பசாமியின் தோற்றம் பற்றிய தகவல் பலருக்குத் தெரியாது. இது தொடர்பாக சில தகவல்கள் தான் இருக்கின்றன. ராமாயணத்தின்படி, வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்றும் சொல்லப்படுகிறது.

காவல் தெய்வத்தின் மூலம்

தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி என்பதைத் தவிர, ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்று ஆய்வுகள் கூறுவதையும் தவிர்த்துவிட முடியாது.

மேலும் படிக்க | கடன் தொல்லை தீர... ஆண்டியையும் அரசனாக்கும் சக்தி கொண்ட தீப வழிபாடு..!!

கருப்பசாமி தோற்றம்

கருப்பசாமி நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் என பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார். காவல் தெய்வம் என்பதற்கு ஏற்றவாறு கம்பீர உருவத்துடன், தலைப்பாகை, இடையில் கச்சை, உருட்டும் விழிகள், முறுக்கு மீசை, கையில் அரிவாள் வைத்திருக்கும் கருப்பசாமியின் கையில் சுக்குமாந்தடியும் இருப்பதைப் பார்த்திருக்கலாம்.

காவல் தெய்வம் கருப்பசாமியின் குடும்பம்

கருப்பசாமியின் மனைவி கருப்பாயி என்றும், மகன்பெயர் கண்டன் எனவும், அண்ணன் முத்தண்ண கருப்பசாமி மற்றும் இளைய கருப்பு என்பவர் தம்பி என்றும், தங்கை ராக்காயி என்பதும் தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை.

சிவபெருமானின் அம்சம் கருப்பசாமி

கருப்பசாமி சிவபெருமானின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புராணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது தனது அம்சமான கருப்பசாமியை ஐயப்பனின் படைக்கு சேனாதிபதியாக அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!

படைத்தளபதி கருப்பசாமி

ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமிக்கு, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சபரிமலைக்கு செல்பவர்கள், ஐயப்பனை தரிசிக்கச் செல்வதற்கு முன்னதாக கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 படிகளில் ஏறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

பெண் காவல் தெய்வங்கள்

காவல் தெய்வத்தை வழிபட்டு விழா எடுக்க சிறந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.காவல் தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயங்கள் சிறியதாக இருந்தாலும், திருவிழாக்காலங்களில் களை கட்டும். காவல் தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், ஆடைகள், அபிஷேக ஆராதனைகள் என கோலாகலமாய் திருவிழா நடைபெறும். 

மாரியம்மன், முத்துமாரி அம்மன், ராக்காட்சி அம்மன், திரவுபதி அம்மன் என பல காவல் தெய்வங்கள் உண்டு. பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வமாக இருப்பதற்கு காரணம், தன்னை நாடியவர்களை தாயாக இருந்து காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. மாரியம்மன் கோவில் இல்லாத ஊரை பார்ப்பது அரிது. ஆடி மாதங்களில் மாரியம்மனுக்கு கூழும், வேப்பிலையும் சிறப்பாக படைக்கப்படும். 

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News