Vastu Tips: திருமண வாழ்க்கை சிறக்க..‘இந்த’ இடத்தில் படுக்கையறையை இருக்க வேண்டுமாம்!
Vastu Tips Tamil: தாம்பத்திய உறவு சிறக்க எந்த மூலையில் படுக்கையறை வைக்க வேண்டும்? அதற்கான டிப்ஸ் இதோ!
உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான மற்றும் அன்பான உறவை உருவாக்க உங்கள் வீட்டில் படுக்கையறை எந்த மூலையில் படுக்கையறை இருக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான சூழல் இருப்பது ஒரு வீட்டிற்கு மிகவும் அவசியமானதாகும். பண்டைய வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில் உள்ள ஆற்றல் உங்கள் உறவை கணிசமாக பாதிக்கும். எனவே, உங்கள் உறவு மற்றும் திருமண வாழ்க்கையில் அன்பையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்த சில வாஸ்து குறிப்புகளை இங்கு பார்ப்போம்.
படுக்கையறைக்கான இடம்:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, பெரிய படுக்கையறை வீட்டின் தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. சிறந்த தூக்கத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காகவும் படுக்கையை தெற்கு நோக்கி தவைப்பது மகிழ்ச்சியான வீட்டிற்கும், மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கும் வழி வகுக்கும்.
படுக்கையறையை எந்த மூலையில் வைக்கவே கூடாது?
பெரிய படுக்கையறையை எந்த நிலையிலும் வடக்கு திசையில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணம் அறிவியல் பூர்வமானது என்றும் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. பூமியானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேல்தட்டு, நடுப்பகுதி மற்றும் அடிப்பகுதி என மூன்று பகுதிகள் இருக்கின்றன. மேலும், பூமிக்கு வடக்கிலிருந்து தெற்கே செல்லும் காந்தப்புலம் உள்ளது.
மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு அதிசய நிகழ்வு, ராஜயோக பண மழை இந்த ராசிகளுக்கு தான்
இதன்படி, நீங்கள் வடக்கு திசையில் தூங்கினால், உங்கள் உடலின் நேர்மறை துருவம் பூமியின் நேர்மறை துருவத்துடன் ஒத்துப்போகிறது. இதனால், இந்த இரு துருவங்களினால் நமக்கு தூக்கக் கோளாறுகள் ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது. மேலும் இதனால் உடல்நலக்கோளாறுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
படுக்கையறை வண்ணங்கள் மற்றும் விளக்குகள்:
இளஞ்சிவப்பு அல்லது வெளிர் நிறங்கள் போன்ற கலர்களை உங்கள் படுக்கையறை சுவரில் அடிக்கலாம். உங்கள் அறையில் டார்க்கான நிறங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது மன அழுத்தம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும். வசதியான சூழ்நிலைக்கு படுக்கையறையில் மென்மையான விளக்குகளைப் பயன்படுத்தவும். அழுத்தமான சூழலை உருவாக்கும் கடுமையான மற்றும் பிரகாசமான விளக்குகளைத் தவிர்க்கவும்.
உங்கள் அறையை சுத்தமாக வைத்திருங்கள்:
படுக்கையறையை அழகாக, இருக்கும் பொருட்களை இருக்கும் இடத்தில் வைக்கவும். இப்படி வைத்திருப்பதால் அமைதியான உணர்வையும் மேம்படுத்த உதவும். படுக்கைக்கு அடியில் உள்ள தேவையற்ற பொருட்களையும் அகற்றவும். இது உங்கள் அறையில் நேர்மறை ஆற்றல் தவழ அனுமதிக்கும். உங்கள் அறையை நன்கு காற்றோட்டமாக வைத்திருப்பது உடலுக்கும் நல்லதாக இருக்கும். மேலும், உங்கள் பார்ட்னரின் தனிப்பட்ட இடத்தை அனுமதிக்கவும். அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதும் அவசியமானதாகவும்.
காதல் கலைகள்:
உங்கள் படுக்கையறையை காதல் கலைப்படைப்புகள் அல்லது ஓவியங்களால் அலங்கரிக்கவும், இது அன்பையும் ஒற்றுமையையும் குறிக்கிறது. இணக்கமான ஆற்றலை சீர்குலைக்கும் சோகமான அல்லது தனிமையான படங்களை படுக்கையறையில் வைப்பதை தவிர்க்கவும்.
பூச்செடிகள் மற்றும்ம் தாவரங்கள்:
படுக்கையறையில் புதிய பூக்கள் அல்லது பூச்செடிகளை வைக்கவும், நேர்மறை ஆற்றலைக் பரப்பவும், காதல் சூழ்நிலையை மேம்படுத்தவும் பூக்கள் மற்றும் தாவரங்கள் உதவும். இந்த தாவரங்களை நன்கு கவனித்து, அவை நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும்.
மேலும் படிக்க | திருவோணத்தில் சூரியன்... பொற்காலத்தை அனுபவிக்கும் ‘5’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ