படுக்கையறையில் ஆற்றலை அதிகரிப்பது எப்படி? இதோ சிறந்த வழிகள்..!

சிலரால் படுக்கையறையில் மிகுந்த ஆற்றலுடன் செயல் பட முடியாமல் இருக்கலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 2, 2023, 08:09 PM IST
  • படுக்கையறையில் சிலர் ஒழுங்காக செயல்பட முடியாமல் தவிப்பர்.
  • ‘அந்த’ சமயத்தில் ஆற்றலை அதிகரிப்பது எப்படி.?
  • இதோ சில வழிமுறைகள்!
படுக்கையறையில் ஆற்றலை அதிகரிப்பது எப்படி? இதோ சிறந்த வழிகள்..!  title=

உங்களது பாலியல் வாழ்க்கை உங்களின் ஒட்டுமொத்த மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது. நீங்கள் படுக்கையறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், நிறைவான உடலுறவை அனுபவிக்கவும் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதும் பிரச்சனைதான், உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு வித உளவியல் ரீதியான பிரச்சனைதான். சிலரால் படுக்கையறையில் மிகுந்த ஆற்றலுடன் செயல் பட முடியாமல் இருக்கலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம். 

உடலுறவு:

இந்தியாவை பொருத்தவரை பாலியல் சார்ந்த விஷயங்களோ, அல்லது உடலுறவு சார்ந்த விஷயங்களோ பேசக்கூடாத ஒன்றாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசுவதாலும், பாலியல் சார்ந்த அறிவுகள் வளர்த்துக்கொள்வதாலும் ஒட்டு மொத்தமாக மக்கள் அனைவருக்குமே நண்மைகள் ஏற்படும். இதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிப்பருவத்திலேயே இது சார்ந்த கல்வியை கற்றுக்கொடுக்க பலர் அறிவுருத்தி வருகின்றனர். காதல், காமம், இச்சை, ஆசை, தொடுதல் போன்ற பல உணவர்வுகளை வெளிப்படுத்த உடலுறவு உபயோகப்படும். இது, காதலர்கள் அல்லது கணவன்-மனைவிக்குள் இருக்கும் இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | 7 நிமிடத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை! கேன்சர் எதிர்ப்பு ஊசி கண்டிபிடித்த NHS

முன்விளையாட்டுகள்:

சிலர், உடலுறவு வைத்துக்கொள்வதில்தான் அலாதி இன்பம் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இது அனைவருக்கும் பொருந்தாது. சிலருக்கு முன் விளையாட்டுகளினால் உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பலர் முன் விளையாட்டுகளினால் படுக்கையறையில் அதிக இன்பம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மன நலனில் அக்கறை முக்கியம்:

சிலருக்கு பதற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக உடலுறவில் சுகம் இல்லாமல் இருக்கலாம். இது அவர்கள் படுக்கையறையில் உள்ள நெருக்கத்தை கெடுத்து விடும். இதனால், ஆற்றலும் குறைந்து காணப்படும். எனவே மனநிலை சம்பந்தமான பிரச்சனைகளில் கவனம் அவசியம். 

புகைப்பழக்கம்..

புகைப்பழக்கம் இருக்கும் சிலரால் படுக்கையறையில் ஆற்றலுடன் செயல்பட முடியாமல் போகிறது. புகைப்பழக்கம் நமது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. எனவே புகைப்பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

பார்ட்னருடன் உரையாடல்..

சில சமயங்களில் உங்கள் பார்ட்னருடன் பேசுவதும் ஆற்றலை அதிகரிக்க உதவும். காரணம், படுக்கையறையில் ஒரு சில விஷயங்களை செய்தால்தான் ஒரு சிலருக்கு பிடிக்கும். அதை தங்களது பார்ட்னர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது போன்ற விஷயங்களை அவரிடம் முன்கூட்டியே பேசி விட வேண்டியது நலம். 

உடற்பயிற்சி:

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது இதய நிலைகளுக்கான ஆபத்து காரணிகளைக் குறைக்கலாம் மற்றும் பாலியல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.  உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் நரம்புகளை சேதப்படுத்தும் மற்றும் ஆண்குறிக்கு செல்லும் இரத்தத்தின் அளவை மாற்றும். இது விறைப்புத்தன்மையைப் பெறுவது அல்லது பராமரிப்பதை மிகவும் கடினமாக்கும். இதை தவிர்க்க உடற்யபயிற்சி முக்கியம். 

மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்..

உங்களது நிலை குறித்து அதற்கு தகுந்த மருத்துவரிடம் கேட்டறிந்தால் அவர் இதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பதை விளக்குவார். நீங்களாக எதையாவது தேடி இணையத்தில் படித்தால் அது தேவையில்லாத சில பிரச்சனைகளைத்தான் உண்டாக்கும் இதை தவிர்க்க மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

மேலும் படிக்க | ஒரு வாரத்தில் 5 கிலோ எடையை குறைக்க முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News