திருவோணத்தில் சூரியன்... பொற்காலத்தை அனுபவிக்கும் ‘5’ ராசிகள்!

Surya Gochar  Effects: ஜோதிடக் கண்ணோட்டத்தில் சூரியனின் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானது. ஜனவரி 15-ம் தேதி சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த நிலையில், இப்போது நடக்கும் நட்சத்திர மாற்றத்தின் போது 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து மற்றும் பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2024, 03:48 PM IST
  • சூரியனின் சஞ்சாரத்தினால் பலனடையும் சில ராசிகள்
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
திருவோணத்தில் சூரியன்... பொற்காலத்தை அனுபவிக்கும் ‘5’ ராசிகள்! title=

திருவோண நட்சத்திரத்தில் சூரியனின் சஞ்சாரம்: ஜனவரி 24 ஆம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றப் போகிறார். சூரியன் திருவோண நட்சத்திரத்தில் சஞ்சரித்து பிப்ரவரி 7 வரை இந்த நட்சத்திரத்தில் நீடித்து இருப்பார். ஜோதிடக் கண்ணோட்டத்தில் சூரியனின் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானது. தற்சமயம் சூரியன் மகர ராசியில்  இருக்கிறார். ஜனவரி 15-ம் தேதி சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த நிலையில், இப்போது நடக்கும் நட்சத்திர மாற்றத்தின் போது 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து மற்றும் பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன. திருவோண நட்சத்திரத்தில் சூரியனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜா என்று விவரிக்கப்படுகிறது, எனவே சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு திருவோண நக்ஷத்திரத்தில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், எந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்களும், பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்கான சூரியப் பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரியன் சஞ்சாரம் செய்யும் போது வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வேலை மாற்றத்திற்கான முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் தந்தையுடன் நல்ல உறவைப் பேணுவது நன்மை பயக்கும், ஆனால் உங்கள் தந்தையின் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.

கடக  ராசிக்கான சூரியப் பெயர்ச்சி பலன்கள்

திருவோண நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். மேலும் உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தை மூலம் கிடைக்கும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அரசு அதிகாரிகளால் ஆதாயங்களையும் பெறலாம். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Saturn Rising: 30 ஆண்டுக்கு பிறகு சனி உதயம்.. 6 ராசிகளுக்கு அதிஷ்டம், ராஜ குபேர யோகம்

கன்னி ராசிக்கான சூரியப் பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கு திருவோண நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பது சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும். இவர்கள், சதிகளை முறியடித்து எதிரிகளையும் வெல்வார்கள். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவார்கள். விதி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கல்விப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக பயணம் இருக்கலாம். சமூகத் துறையில் செல்வாக்கு, கௌரவம் போன்ற பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களின் ஊக்கமும் அனுகூலமும் கிடைக்கும்.

துலாம் ராசிக்கான சூரியப் பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்காரர்கள் திருவோண நட்சத்திரத்தில் சூரியனின் சஞ்சாரத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும், இந்தக் காலத்தில் வாகனம் போன்றவற்றை வாங்கலாம். உங்களுக்கு வாகன சுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூகத் துறையில் உங்களின் செல்வாக்கு அதிகரித்து நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில நல்ல செய்திகளையும் பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் நீண்ட தூர பயணம் செல்லலாம்.

மகர ராசிக்கான சூரியப் பெயர்ச்சி பலன்கள்

சூரியனின் இந்த சஞ்சாரத்தால், மகர ராசிக்காரர்களின் சக்தி மற்றும் செல்வாக்கு இரண்டும் அதிகரிக்கும். மேலும் உங்களின் அரசுப் பணிகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் பணியிடத்திலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்து மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசுப் பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். அரசியலுடன் தொடர்புடைய இந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி...அனைத்தும் பொங்கும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News