சனி தோஷம் மட்டுமல்ல, ராகு கேது தோஷங்களையும் போக்கும் கருப்புக் கயிறு பரிகாரம்
Astro Remedies For Shani Dosham: கண் திருஷ்டி முதல் பல்வேறு கண்ணேறுகளையும் போக்க கருப்புக் கயிறு கட்டுவது வழக்கம். திருஷ்டிக் கயிற்றில் எத்தனை முடிச்சு போட வேண்டும் தெரியுமா?
திருஷ்டிகளை போக்கும் கயிறுகள்: நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே உடலில் உள்ள நாடியின் செயல் பாடும் அமைகின்றது என்பதால், நம்முடைய கணுக்கால் பகுதியில் கயிறு கட்டி நாடியின் இயக்கம் சீராக்குவது என்பது இந்தியாவில் பன்னெடுங்காலமாக தொடரும் பழக்கம் ஆகும். இதற்குக் காரணம், நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகள் நெருங்காது என்பது தான். மேலும், துஷ்ட சக்திகளிலிருந்து காக்கும் என்பதும் கெடுபலன் தரக்கூடிய கண் திருஷ்டி அண்டாது என்றும் சொல்லப்படுகிறது.
இதனைத் தவிர, ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது சனியின் தாக்கத்தைக் கொண்டவர்கள், கருப்பு நிற கயிற்றை அணிவது பல நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன? சனி பகவான் ஒருவரை பீடிக்கும்போது, முதலில் கால்களை தான் பற்றுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே, காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம், சனி தோஷம் நீங்கும்.
காலில் கருப்பு கயிறு கட்டுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கருப்பு கயிற்றில் நடுவில் முடிச்சு போடுவதைப் பார்த்திருக்கலாம். முடிச்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் மாறுபடும். பொதுவாக கயிறு கட்டும்போது எத்தனை சுற்று சுற்றுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.
3,5,7 என ஒற்றைப்படை இலக்கங்களில்தான் கயிற்றில் சுற்றி கட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள். 3 மற்றும் 5 சுற்றுகள் சுற்றுவது சிறப்பு என்று சொல்வார்கள். 3 முடிச்சுகள் திருஷ்டியை கழிக்கும், 5 துர்சக்திகளிடமிருந்து காக்கும், 7 முடிச்சுகள் செல்வத்தை பெருக்கும். ஏழு முடிச்சுகளுக்கு மேல் போடக்கூடாது.
பெண்கள் இடது கை மற்றும் காலில்தான் கட்ட வேண்டும். அதுபோல ஆண்கள் வலது கை மற்றும் காலில்தான் கட்ட வேண்டும். மாற்றிக் கட்டக்கூடாது. கருப்புக் கயிறு கட்டுவதால் சனீஸ்வரர் மட்டுமல்ல, வேறு இரண்டு கிரகங்களும் பலப்படும். ராகு, கேது கிரகங்கள் பலமடையும். இந்த மூன்று அசுப கிரகங்களால் ஏற்படும் தீய பலன்களையும் கறுப்புக் கயிறு கட்டுவது நீக்கும்.
ராகு கேது தோஷத்திற்கு கறுப்புக் கயிறு
ஜாதகத்தில் கிரகங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தால், அதிலும் குறிப்பாக ராகு, கேது எனும் நிழல் கிரகங்களின் நற்பலனைப் பெற்றுத் தரும் கருப்புக் கயிறை காலில் கட்டிக் கொள்ளலாம். அதேபோல, ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எந்த எதிரி கிரகத்துடன் இணைந்தாலும் நிறைய பாதிப்புகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், கருப்புக் கயிற்றை காலில் தீய பாதிப்புகளைக் குறைத்து நல்ல பலனைத் தரும்.
மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பிறகு கும்ப ராசியில் சனி உச்சம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்
கறுப்புக் கயிறு எப்படி எப்போது அணிவது?
கருப்பு கயிறை சனி பகவான் அல்லது பைரவர் கோவிலுக்கு எடுத்துச் சென்று கட்டிக் கொள்ளலாம்
சனிக்கு உரித்தான மந்திரத்தை கறுப்புக் கயிறு அணிந்த பிறகு 21 முறை உச்சரிப்பது நல்லது
காலில் கருப்பு கயிறு அணிந்திருக்கும்போது கழுத்தில் சிவப்பு கயிறு அணியக்கூடாது. அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ