சனி தோஷத்தால் தடைபடும் வெற்றியை பெற எளிய பரிகாரம்

எடுக்கும் எந்த வேலையும் தடைபட்டால் அல்லது தோல்வியில் முடிந்தால் உங்களுக்கு சனி தோஷம் இருக்க வாய்ப்பு உள்ளது. இதில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் எளிய பரிகாரம் உள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2023, 06:17 AM IST
  • வாழ்க்கையில் தோல்வி வருகிறதா?
  • உங்களுக்கு சனி தோஷமாக இருக்கலாம்
  • இந்த பரிகாரம் மூலம் நிவாரணம்
சனி தோஷத்தால் தடைபடும் வெற்றியை பெற எளிய பரிகாரம் title=

சனி பகவான் ஒருவரின் செயலுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் நீதியின் கடவுளாக கருதப்படுவதால் அவரின் கோபத்துக்கு உள்ளாகுபவர்கள் சிக்கலையும் பிரச்சனைகளையும் கட்டாயம் எதிர்கொண்டே ஆக வேண்டும். தவறுக்கு தண்டை மட்டுமே அவர் கொடுக்கும் தீர்ப்பு. அவரின் ஆசி பெற்றவர் நிச்சயம் வாழ்க்கையில் மேன்மை பெற்றவராக இருப்பார். புகழின் உச்சத்துக்கு செல்வது மட்டுமல்லாமல் நல்ல செல்வத்துடனும், மரியாதையுடனும் இருப்பார்கள். அதேபோல் அவரின் எதிர்மறையான ஆற்றலை பெறுபவர்கள் சமூகத்தில் மிகவும் கீழான நிலையில் இருப்பார்கள். சனி பகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒழுக்கத்தை கடைபிடிப்பதுடன், சனி கிழமைகளில் சில விரதங்களையும் கடைபிடித்தால் அவரின் ஆசியை பெற வழி இருக்கிறது.

சனிக்கிழமை விரதம்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜாதகத்தில் இருந்து சனி தோஷத்தை நீக்க, ஒருவர் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்வில் உள்ள அனைத்துவிதமான தொல்லைகளும் விலகி, தடைகள் நீங்கும். இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க, அதிகாலையில் எழுந்து முதலில் குளிக்கவும். அதன் பிறகு, சுத்தமான ஆடைகளை அணிந்து, அரச மரத்தின் வேருக்கு நீர் ஊற்றவும். அதன் பிறகு, இரும்பினால் செய்யப்பட்ட சனி தேவரின் சிலையை பஞ்சாமிருதத்துடன் குளிப்பாட்டவும். அதன் பிறகு சனி தேவரை வணங்கவும்

.மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. மகிழ்ச்சி, செல்வம் அதிகரிக்கும்

விரதத்தின் விதிகள்

நீங்கள் சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கும் போது, ​​​​அன்று பூண்டு, வெங்காயம் கொண்ட அல்லது அசைவ உணவுகளை நீங்கள் சாப்பிடக்கூடாது. இதனுடன், மற்றவர்களிடம் உங்கள் மனதில் எந்தத் தவறான விஷயத்தையும் நினைக்கவோ, பேசவோ வேண்டாம். சனிக்கிழமைகளில் தேவைப்படுபவர்களுக்கு தகுந்த நன்கொடைகள் செய்யவும். விரதம் இருப்பவர்கள் பகலில் பழங்களை உண்ணலாம். மாலையில் உளுத்தம் பருப்பில் செய்த கிச்சடி சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்

சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவம்

தங்கள் வேலையில் தடைகளை எதிர்கொள்பவர்கள், சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். இந்த விரதத்தை கடைபிடிப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுகிறது. வேலை-திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வீட்டில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் நீங்குவதால் நோய்களில் இருந்து நிவாரணம் உண்டாகும்.

மேலும் படிக்க | சூரிய சஞ்சாரம்: ஆகஸ்ட் 17 வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News