ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை அறிய விரும்பினால் அதை ஜோதிடத்தின் மூலம் மட்டுமே அறிய முடியும். எனவே வரவிருக்கும் மாதம் எப்படி இருக்கும், என்ன பலன் கிடைக்கும் பற்றிய தகவல்களை நாம் ஜோதிடம் மூலமே தெரிந்துக்கொள்ள முடியும். அதில் இருந்து நாம் நமது செயல்களைத் தீர்மானிக்கிறோம், மேலும் இதன் மூலம் நம் வரவிருக்கும் நேரத்திற்குத் திட்டங்களை உருவாக்கி, நம் வேலைகளை வெற்றிகரமாகச் செய்ய மயற்சிக்கலாம். எனவே நீங்களும் ஆகஸ்ட் மாதத்தில் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்பினால், இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: ஆகஸ்ட் 2022 மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சற்று கடினமாக இருக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமாக இருக்கும் . இந்த மாதத்தில் நீங்கள் நிதி ஆதாயத்தையும் அடையலாம்.


மேலும் படிக்க | Weekly Horoscope: குபேர அருளால் இந்த வாரம் இந்த ராசிகளுக்கு பண மழை 


ரிஷபம்: ஆகஸ்ட் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த மாத தொடக்கத்தில் இருந்து ரிஷபம் ராசிக்காரர்கள் நிதி ஆதாயம் காண்பர். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு மங்களகரமானது.


மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் கலவையான பலன்களை அளிக்கும். ஆரோக்கியத்தின் பார்வையில், இந்த மாதம் உங்களை தொந்தரவு ஏற்படலாம். தொழில் ரீதியாக, மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் பலனளிக்கும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலக்கப் போகிறது. தொழில் ரீதியாகப் பார்த்தால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் தெரியாத நபரின் உதவியைப் பெறலாம், ஏதேனும் மன இறுக்கம் இருந்தால், நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 


சிம்மம்: இந்த மாதம் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் பத்தாம் வீட்டில் நீடிக்கிறார். இதன் காரணமாக பணியிடத்தில் பலம் உண்டாகும். ஆரோக்கியத்தின் பார்வையில், இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சவால்களைக் கொண்டுவரும்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு, ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். காதல் உறவுகளிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


துலாம்: 2022 ஆகஸ்ட் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும், இந்த மாதம் நீங்கள் காதல் வாழ்க்கை மற்றும் கல்வி மற்றும் நிதி அடிப்படையில் நேர்மறையான முடிவுகளைப் பெறலாம். தொழில் பார்வையில், ஆகஸ்ட் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் சாதகமான பலன்களைத் தரும். பொருளாதாரப் பார்வையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் கலவையான பலன்களைத் தரும். மேலும், இந்த மாதம் நீண்ட நாட்களாக சில பணம் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தின் பார்வையில், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கடினமாக இருக்கும்.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்கும். நிதி வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த மாதம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமாக அமையும். தொழில் ரீதியாக, கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், நீங்கள் செய்யும் வேலைகளில் திடீர் தடைகள் ஏற்படலாம். 


மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு கலப்பு மாதமாக அமையும். ஆரோக்கியத்தின் பார்வையில், இந்த மாதம் மீன ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை ஆகஸ்ட் மாதத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | வீட்டில் சனீஸ்வரரை வணங்குபவரா? ஜாக்கிரதை! இது சனியை உக்ரமாக்கலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ