வீட்டில் சனீஸ்வரரை வணங்குபவரா? ஜாக்கிரதை! இது சனியை உக்ரமாக்கலாம்

Lord Shani Prayer in Home: சனீஸ்வரரை வீட்டில் வணங்குபவர்கள் எச்சரிக்கையாக செயல்பட வணங்க வேண்டும். சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படும் விஷயங்களை தவிர்க்கவும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2022, 06:12 AM IST
  • சனியின் நேரடி பார்வையில் நின்று வணங்குவதைத் தவிர்க்கவும்
  • நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நன்மைகளை அள்ளித் தரும் சனீஸ்வரர்
  • எள்சாதம் அளிக்கும் ஏராளமான நன்மைகள்
வீட்டில் சனீஸ்வரரை வணங்குபவரா? ஜாக்கிரதை! இது சனியை உக்ரமாக்கலாம் title=

சனிதேவர் வழிபாடு: சனிபகவானின் சுப பார்வை ஒருவர் மீது விழுந்தால், அவர் சிம்மாசனத்தில் அமரலாம். அதே நேரத்தில், சனீஸ்வரரின் கோபப்பார்வை ராஜாவை கூஜாவாகவும் மாற்றிவிடும். சனீஸ்வரரின் அன்பான பார்வையே தன்மேல் விழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. நீதியின் கடவுளாக அறியப்படும் சனீஸ்வரரை வணங்கும்போது சரியான வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டாலும், தவறான செய்கைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதிலும் வீட்டில் சனிபகவானை வழிபடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சனியை வணங்கினால், இந்த தவறை செய்யாதீர்கள், அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்

சனிதேவர் சிலைகளை வீட்டில் வைக்க வேண்டாம்

வீட்டில் சனியின் சிலை அல்லது படத்தை வைக்கக்கூடாது. உண்மையில், சனியின் பார்வையில் எதிர்மறை தன்மை உள்ளது, எனவே ஒருவர் அவரது கண்களுக்கு முன்னால் செல்வதை தவிர்க்க வேண்டும். சனியின் நேரடி பார்வை படும் ஒருவரின் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. சனீஸ்வரரை வணங்கும்போது அவருக்கு நேர் எதிரில் நிற்காமல், கொஞ்சம் நகர்ந்து பக்கவாட்டில் நின்று வணங்குவது நல்லது. 

மேலும் படிக்க | சனீஸ்வரரின் கடைக்கண் சிரிப்பால் முகம் மலரும் மூன்று முத்தான ராசிகள்

விளக்கு ஏற்ற வேண்டாம்

சனிபகவானை வழிபடும் போது, ​​அவர் முன் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். மாறாக அரச மரத்தடியில் தீபம் ஏற்றவும். வீட்டில் இருந்து சனி பகவானை வணங்கினால், மேற்கு திசையில் அமர்ந்து வணங்கவும். சனீஸ்வரருக்காக மந்திரங்களை சொல்லும்போதும் மேற்கு திக்கில் அமர்வது நல்லது.  

சனியை மனதில் வைத்து வழிபடவும்

வீட்டில் சனியின் சிலை அல்லது படத்தை வைப்பதற்கு பதிலாக, அவரை மனதில் வைத்து வணங்கவும். சனிக்கிழமைகளில் எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும். எள் கலந்த சாதம் செய்து நைவேத்தியம் செய்து அதை பிறருக்கும் அளித்து, பிரசாதமாக உண்ணவும்.

மேலும் படிக்க | சனியின் அருளால் மஹாபுருஷ ராஜயோகம்: 4 ராசிகளின் வாழ்க்கை இரவோடு இரவாக மாறும்

அடுத்த 6 மாதங்களுக்கு சனி பகவானின் அருள் 

சனி பகவான் ஜூலை 12ம் தேதியன்று மகர ராசிக்குள் நுழைந்தார். அவர் அடுத்த 6 மாதங்களுக்கு மகர ராசியில் இருப்பார். மகர ராசிக்கு வருவதற்கு முன்னதாக, 2022 ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்தார்.

இப்போது மகர ராசியில் பிரவேசித்துள்ள சனீஸ்வரர் அடுத்த ஆறு மாதங்களுக்கு பிறகுதான் ராசி மாறுவார்.இந்த காலகட்டத்தில் மீனம், தனுசு மற்றும் ரிஷப ராசிக் காரர்களுக்கு மிகவும் நல்ல காலமாக இருக்கும். இவர்கள் சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கை மேலும் மேன்மையடையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அங்கார யோகத்தால் கஷ்டப்பட்டு நஷ்டப்படப்போகும் 5 ராசிகள்: ராகு செவ்வாய் தோஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News