2022 ஐபிஎல்: அடேங்கப்பா.. சிக்ஸரில் இப்படியொரு சாதனையா?!
நடப்பு ஐபிஎல்லில் இதுவரை 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட தொடர் எனும் பெயரை நடப்பு சீசன் பெற்றுள்ளது.
ஐபிஎல்லின் லீக் போட்டிகள் நிறைவடைந்து, ப்ளே ஆப் சுற்று நாளை முதல் தொடங்கவுள்ளது. லீக் போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரானது சிக்ஸரில் சாதனை படைத்துள்ளது.
ஆம், சிக்ஸர் மழை பொழியும் ஐபிஎல் காட்டில் இம்முறை கொஞ்சம் ஓவராகவே மழை பெய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் எண்ணிக்கையாக 872தான் இருந்துவந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தொடரில் இச்சாதனை படைக்கப்பட்டது. அதில் ரிஷப் பந்த் மட்டுமே 37 சிக்ஸர்கள் அடித்து முதலிடம் பிடித்தார்.
அசைக்க முடியாத அந்த சாதனையை லீக் சுற்று முடிவிலேயே காலி செய்துள்ளது நடப்பு ஐபிஎல். ஆம் நடப்புத் தொடரில் சிக்ஸர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடர் ஒன்றில் ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்படுவது இதுவே முதல்முறை. ராஜஸ்தான் அணி மட்டும் 116 சிக்ஸர்களை இதுவரை அடித்து முதலிடத்தில் உள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிதான் சிக்ஸர் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நடப்பு ஐபிஎல்லில் இதுவரை 37 சிக்ஸர் அடித்துள்ள ராஜஸ்தான் வீரர் பட்லர் இதில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க | மலைக்க வைக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விலை
பஞ்சாப் அணி வீரரான லிவிங்ஸ்டன் இத்தொடரில் அடித்த 117 மீட்டர் தூர சிக்ஸர்தான் ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட நீண்ட தூர சிக்ஸராகவும் பதிவாகியுள்ளது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் நடப்பு சீசனின் ஆயிரமாவது சிக்சரை அடித்த வீரரும்கூட இவர்தான்.
மேலும் படிக்க | அஜித்தைத் தொடர்ந்து சூர்யாவைக் குறிவைக்கும் சிறுத்தை சிவா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR