நடப்பு ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி மிக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், சூப்பர் 12 சுற்றுடன் இந்தியா வெளியேறியிருந்த நிலையில், இந்தாண்டு ரோஹித் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு தொடரின், சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற 5 போட்டிகளில் இந்தியா நான்கில் வெற்றி பெற்றாலும், அணியில் இருந்த பல்வேறு ஓட்டைகள் அனைத்து போட்டிகளிலும் வெளிப்பட்டன. பேட்டிங்கின்போது, பவர்பிளே ஓவரில் சொதப்புவது, இரு பேட்டர்களை மட்டுமே நம்பி மொத்த பேட்டிங் யூனிட்டும் இருந்தது, பிளேயிங் லெவனில் வேறு வீர்ரகளை சரியான நேரத்தில் முயற்சிக்காதது என அடுத்தடுத்து இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன. 


டி20 ஃபார்மேட்டுக்கு எவ்விதத்திலும் ஒன்றாமல், பிளேயிங் லெவனில் தொடர்ந்து விளையாடிய 4 வீரர்கள் இந்தியாவின் தோல்விக்கு முதன்மை காரணம் என கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அவர்களின் ஆட்டம் எந்தெந்த விதத்தில், இந்தியாவின் உலகக்கோப்பை கனவை பாதித்தது என்பதை இங்கு காணலாம். 


அழுத்தத்தில் கே. எல். ராகுல்


இந்த தொடரில், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக இரண்டு அரைசதங்களை கே.எல். ராகுல் பதிவுசெய்திருந்தார். இவ்விரண்டு அணிகளும் சிறப்பான பந்துவீச்சை பெற்றிருந்தாலும், அந்த போட்டிகளில் இந்தியாவுக்கு பெரிதாக அழுத்தம் ஏதும் இல்லை. அழுத்தம் நிறைந்த போட்டிகளான இந்தியா - பாகிஸ்தான்,  இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய போட்டிகளில் அவரின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது.


ஓப்பனராக களமிறங்கி, ஸ்ட்ரைக்கில் நின்று முதல் ஓவரை மெய்டன் செய்வது என்பது எதிரிலிருக்கும் பேட்டருக்கு அழுத்தத்தை அதிகரிக்கும். அதையே தான் ராகுலும் செய்தார். இந்த தொடரில், இரண்டு போட்டிகளின் முதல் ஓவரில், ராகுல் ஸ்ட்ரைக்கில் நின்று ஒரு ரன்னை கூட சேர்க்கவில்லை. இது பவர்பிளே வாய்ப்பையும் வீணடிக்க செயலாக அமைகிறது. இவை அனைத்தும்தான், நேற்றைய அரையிறுதியிலும் பிரதிபலித்தது. 


வந்தவுடன் பவுண்டரியை அடித்து ஆசுவாசப்பட்டாலும் அவரால் அழுத்தமின்றி விளையாட இயலவில்லை. எனவே, 5 பந்துகளில் 5 ரன்களை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா தொடர்ந்து, சறுக்கிய இடம் இது. தொடரின் ஏதாவது ஒரு போட்டியில், ரிஷப் பண்டை ஓப்பனிங் ஆட வைத்து, ரோஹித் பரிசோதித்து பாத்திருக்கலாம் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | T20 worldcup: மும்பை இந்தியன்ஸூன்னு நினைச்சு இந்திய அணியை அடி வெளுத்த பட்லர்


ரோஹித் சர்மா - பேட்டிங்


இந்த உலகக்கோப்பை தொடங்கியதில் இருந்தே இந்தியாவின் பேட்டிங் பவர்பிளே குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. ஒருபக்கம் ராகுல் என்றால், மறுபக்கம் ரோஹித் தனது விக்கெட்டுகளை பௌலர்களுக்கு தானமாக வழங்கிக்கொண்டிருந்தார். 


நேற்றைய போட்டியில், டெஸ்டில் விளையாடுவது போன்று 28 பந்துகளில் 27 ரன்களை அடித்தது, அதுவும் பவர்பிளே முழுவதும் ஆடியது இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை. அவரின் இயல்பான ஆட்டம் தொலைந்து வெகுநாள்கள் ஆகிவிட்டதாகவும் கருத்துகள் நிலவுகின்றன.  



ரோஹித் சர்மா - கேப்டன்ஸி


டி20-ஐ பொறுத்தவரை ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நடப்பு டி20 உலகக்கோப்பையில், அந்த ரோஹித் சர்மா எந்த இடத்திலும் வெளிப்படவே இல்லை என்பதுதான் மிகவும் கவலைக்குரியதாக அமைந்தது. அவருக்கு வேண்டிய அணி அவருக்கு கிடைத்தது, கொடுக்கப்பட்டது. அப்பிடியிருந்தும் அவரால், இந்தியாவின் உலகக்கோப்பை தாகத்தை தணிக்க முடியவில்லை. சஹாலுக்கு பதிலாக அஸ்வினுக்கு இடமளித்தது, தினேஷ் கார்த்திற்கிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது மேலும், பேட்டிங் ஆர்டரில் ஏற்பட்ட மாற்றம் என அவரது கேப்டன்ஸி மீதும் விமர்சனங்கள் எழுந்தன. 


விக்கெட் வீழ்த்தாத அஸ்வின்


இந்தியா செய்த மிகப்பெரும் தவறுகளில் ஒன்று, சஹாலுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பளித்தது. உலகத்தரமான சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர் என்றாலும், இந்த தொடரில் அணியில் அவரது பங்களிப்பு மிகவும் மோசமாக இருந்தது. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் இவர், அதை செய்ய தவறியதுதான் நேற்றைய போட்டியிலும் வெளிப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பையிலும், சஹாலுக்கு பதில் அஸ்வினை எடுத்து மிகப்பெரிய தவறை பிசிசிஐ செய்திருந்தது. இந்த தொடரில், அவர் மொத்தம் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் (ஜிம்பாப்வே-3, நெதர்லாந்து-2, தென்னாப்பிரிக்கா-1).



ஸ்விங் குமார்  


புது பந்துகளில், இரு பக்கங்களிலும் ஸ்விங் செய்யும் திறன்பெற்றவர் புவி. பவர்பிளே ஓவர்களை தவிர்த்து டெத் ஓவர்களில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்பது பல போட்டிகளில் வெளிப்பட்டது. பந்தை தேய தொடங்கியுடன் அவரை ஓரங்கட்ட வேண்டிய சூழலும் இருந்தது. ஆனால், நேற்று பந்து ஸ்விங் ஆகியும், பட்லரை பலமுறை விக்கெட் எடுத்த பெருமை இருந்தும் புவியால் நேற்று கைக்கொடுக்க முடியவில்லை. 2 ஓவர்களில் 25 ரன்களை வாரி வழங்கிவிட்டது ஓரங்கப்பட்ட நிகழ்வுதான் நேற்றும் நடந்தது. 



இதன்பின்னர், இந்திய டி20 அணியில் ஏற்படப்போகும் மாற்றங்கள், அணுகுமுறை தேவைப்படும் மாற்றங்கள் ஆகியவை குறித்து இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. மேல்கூறிய வீரர்கள் மட்டுமின்றி, படுதோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இவர்கள் முதன்மையான காரணமாக அமைந்ததுள்ளனர். 


மேலும் படிக்க | சச்சின் போல் தனி ஒருவனாக போராடும் கோலி; கானல் நீராக இருக்கும் உலக கோப்பை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ