ஐபிஎல் 2022 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது.  முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.  டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.  பவர்பிளேயின் இறுதி ஓவரில், வருண் சக்ரவர்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடுவிற்கு பந்து வீசினார்.  அப்போது பந்து ஸ்டம்பில் பட்டு பவுண்டரியை நோக்கி சென்றது.  வருண் அவுட் என்று நினைக்க, பெயில்கள் கீழே விலாததால் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பித்தார் ராயுடு.  இருப்பினும் ரன் அவுட் ஆகி 15 ரன்களில் வெளியேறினார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | IPL 2022: முதல் போட்டியில் வாகை சூடியது KKR! தடுமாறியது CSK


முதல் போட்டியில் புதிய ஓப்பனிங் ஜோடிகளான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை.  உமேஷ் யாதவின் அற்புதமான பந்து வீச்சில் பவர்பிளேயில் கெய்க்வாட் மற்றும் கான்வேயின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே ருதுராஜ் ரன் ஏதும் இன்றி வெளியேறினார்.  உத்தப்பா சிறப்பாக விளையாடி 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் சென்னை அணியின் விக்கெட்கள் அடுத்தது வில 61 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.  


அதன் பின்பு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோனி ஆட்டத்தை தங்கள் பக்கம் மாற்றினார்.  சிறப்பாக ஆடிய தோனி அரை சதம் அடித்தார்.  10.5 ஓவரில் 5 விக்கெட்களை இழந்த போதிலும் அடுத்த விக்கெட்டை கடைசி வரை இழக்காமல் இருந்தனர்.  இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது.  கேகேஆர் அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.  கடந்த சீசன் ஐபிஎல் பைனல் போட்டியில் தோற்கடித்ததற்கு பலி வாங்கியது கொல்கத்தா.


மேலும் படிக்க | தோனியின் நிறைவேறாத கனவை நனவாக்கப்போகும் 3 வீரர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR