இந்திய வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறும் வங்கதேச அணி!
ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது.
ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் சூப்பர் 4 பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று துபார் சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகின்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி முதலில் பேட்டிங்க் செய்துவரும் வங்கதேச அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துவக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் 7(16), ஹொசைன் சான்டோ 7(14) ரன்களில் வெளியேற, தொடர்ந்து களமிறங்கிய சாகிப் அல் ஹாசன் 17(12) ரன்களிலும், ரஹிம் 21(45) ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கும் வீரர்களும் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறி வருகின்றனர்.
தற்போதைய நிலைவரப்படி வங்கதேச அணி 44 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரவீந்தர் ஜடேஜா 4 விக்கெட்டுகளை குவித்துள்ளார்!