டெல்லி டெஸ்ட் போட்டியில் 2வது நாளில் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் இறங்கியது. நாளின் தொடக்கத்திலேயே நாதன் லயனின் சுழலில் இந்திய அணி முன்னணி வீரர்களான ரோகித், கே.எல்.ராகுல் மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் வந்த ஸ்ரேயாஸ் அய்யரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, விராட் கோலி ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்து பொறுப்புடன் விளையாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரும் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் மர்பி பந்துவீச்சில் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஜடேஜா. சிறிது நேரத்திலேயே சர்ச்சைக்குரிய வகையில் எல்டபள்யூ அவுட் கொடுக்கப்பட்டு விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.



மேலும் படிக்க | IND vs AUS: டெல்லி டெஸ்ட்... விராட் முதல் புஜாரா வரை - அடையப்போகும் மைல்கல்கள் என்னென்ன?


அப்போது இந்திய அணி 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களம் புகுந்த அக்சர் படேல் மற்றும் அஸ்வின் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரைசதம் அடித்தார். 



ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 263 ரன்களுக்கு மிக நெருக்கமாக வந்த சமயத்தில் அஸ்வின் 37 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, சிறிது நேரத்திலேயே 77 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த அக்சர் படேலும் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 1 ரன் பின்தங்கிய நிலையில் அதாவது 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 


அந்த அணியின் உஸ்மான் கவாஜா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஜோடி ஒருநாள் போட்டியில் விளையாடுவதுபோல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். 12 ஓவர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.


மேலும் படிக்க | Chetan Sharma Resigns: Zee News ஸ்டிங் ஆப்ரேஷன்... பதவி விலகினார் சேத்தன் சர்மா!


மேலும் படிக்க | Pujara: 'புஜாராவின் கனவு’ இந்த கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும்


மேலும் படிக்க | அஸ்வின் புதிய மைல்கல்: ஆஸி-க்கு எதிராக 100 விக்கெட்டுகளை விழ்த்தி சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ