ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இன்று தனது திடீர் ராஜினாமாவை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பையை (T20 Worldcup) வென்ற ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த லாங்கர் வீரர்கள் மற்றும் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது ராஜினாமா செய்துள்ளார்.   கிரிக்கெட் வாரியதுடன் நேற்று நடைபெற்ற கடுமையான பேச்சு வார்த்தையிலும் சுகமான முடிவுகள் எட்டப்படவில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | பிரெட்லீ பந்துவீச பயந்த இந்திய ஜாம்பவான்..!


ஆஷஸ் தொடரை 4-0 என வென்று ஆஸ்திரேலியா (Australia Team) அணியை தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக கொண்டுவந்த போதிலும், பயிற்சியாளர் பதவி முடிவடைய உள்ள நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க சொல்லியுள்ளது.   இதில் லாங்கருக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாகதான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. விளையாட்டு மேலாண்மை நிறுவனமான DSEG, "எங்கள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இன்று ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். நிர்வாகத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளபட்டது" என்று அறிக்கை வெளியிட்டது.



பால் டேம்பரிங்கில் சிக்கி இருந்த ஆஸ்திரேலியா அணியை பல அபார வெற்றிகளின் மூலம் மறக்கடிக்க செய்தார் லாங்கர்.  2018ம் ஆண்டு இவர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற போது ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளை ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கி இருந்தது.  பின்பு தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன், டி20 உலக கோப்பை, ஆஷஸ் வெற்றி என உச்சத்தை எட்டியது.



ஆனாலும் அணியில் உள்ள சில வீரர்களுக்கும் லாங்கருக்கும் மனக்கசப்பு இருந்தது.  சிலர் இதனை வெளிப்படையாகவும் தெரியப்படுத்தினர்.  லாங்கர் 1993 முதல் 2007 வரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45.27 சராசரி மற்றும் 23 சதங்கள் உட்பட 7,696 ரன்கள் குவித்துள்ளார்.ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பொற்காலத்தின் ஒரு பகுதியாக லாங்கர் இருந்தார். ஷேன் வார்ன், ஆடம் கில்கிறிஸ்ட், க்ளென் மெக்ராத் மற்றும் பாண்டிங் போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடி உள்ளார்.   லாங்கர் மற்றும் மேத்யூ ஹெய்டன், 113 டெஸ்ட் போட்டிகளில் 51.58 சராசரியுடன் 5,655 ரன்களை எடுத்ததன் மூலம், வரலாற்றில் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக காணப்படுகின்றனர்.


ALSO READ | மோசமான ஆட்டம்: புஜாரா, ரஹானேவை ரஞ்சி போட்டிகளுக்கு அனுப்ப திட்டம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR