2022இல் இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய வீரர்கள் யார் யார்?
2022 Best Indian Players : இந்திய அணிக்கு மூன்று பார்மட்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2022 Best Indian Players : உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 2022ஆம் ஆண்டு என்பது இந்திய ஆடவர் கிரிக்கெட்டுக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்துள்ளது. பல தொடர்களை உள்ளூரிலும், வெளிநாட்டிலும் இந்திய அணி வென்றிருந்தாலும், டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி, ஆசிய கோப்பையில் தோல்வி, தலைமைகளின் திடீர் மாற்றம் ஆகியவை மட்டுமின்றி ஆண்டின் கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியது என சொல்லிக்கொண்டே போகலாம்.
இருப்பினும், இந்தாண்டு பல புதிய நம்பிக்கைகளையும் இந்திய அணிக்கு அளித்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. சூர்யகுமாரின் அசூரத்தனமான எழுச்சி, ஹர்திக் பாண்டியாவின் கச்சிதமான தலைமை போன்றவை முக்கியமானவை. இந்நிலையில், இந்தாண்டு இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மட்களிலும் சிறப்பாக விளையாடிவர்கள் குறித்த விவரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. டெஸ்ட் அரங்கில், இந்தாண்டு ரிஷப் பண்ட் 7 போட்டிகளில் 680 ரன்களை குவித்துள்ளார். இவர்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர். அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளுடன், இந்தாண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஒருநாள் போட்டி பொறுத்தவரை, ஷ்ரேயஸ் ஐயர் அதிக ரன்களையும், சிராஜ் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 17 போட்டிகளில் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 724 ரன்களையும், சிராஜ் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். கூடுதலாக ஷ்ரேயஸ் ஐயர்தான், இந்தாண்டு மூன்று பார்மட்களையும் சேர்த்து அதிக ரன்களை எடுத்த இந்திய வீரராக உள்ளார்.
இந்தாண்டு இந்திய அணி தரப்பில், டி20 அரங்கில் 31 போட்டிகளில் சூர்யகுமார் 1164 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்தவராகவும், புவனேஷ்வர் குமார் 32 போட்டிகளில் 37 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவராகவும் உள்ளார்.
தற்போது, இந்தியாவுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் ஒருநாள், டி20 தொடர்களை விளையாட உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி காத்திருக்கிறது.
மேலும் படிக்க | Rishabh Pant Car Accident: ஐபிஎல் 2023ல் டெல்லி அணியின் கேப்டன் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ